ஃப்ரீயாக பார்க்கலாம்: Netflix கொண்டாட்ட அறிவிப்பு

நெட்ஃப்ளிக்ஸ் அதன் இலவச ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் நிகழ்வின் போது எந்தவொரு குறிப்பிட்ட கட்டண விவரங்களுக்கும் உட்படுத்தப்படாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

By: October 23, 2020, 8:45:22 AM

Netflix offer free access to its Indian Customer Tamil news: இந்திய மக்களுக்கு, ‘ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் (StreamFest)’ நிகழ்வின் கீழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கங்களுக்கும் முழுமையான அணுகலை வழங்கும் ஓர் புதிய சலுகையை வழங்குவதற்காகத் தயாராகி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ். இது, டிசம்பர் 4-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் தொடங்கி, தொடர்ந்து 48 மணி நேரம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதனால், உங்களிடம் ஆக்டிவ் சந்தாவுடன் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு இல்லையென்றாலும், அடுத்த 2 நாட்களுக்கு நீங்கள் அதன் உள்ளடக்கத்தைப் பெற முடியும். கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்தை எந்த சாதனத்திலும் வரம்புகள் இல்லாமல் எளிதாக ஸ்ட்ரீம் செய்யலாம். இது தவிர, நெட்ஃப்ளிக்ஸ் அதன் இலவச ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் நிகழ்வின் போது எந்தவொரு குறிப்பிட்ட கட்டண விவரங்களுக்கும் உட்படுத்தப்படாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ், அதன் Q3 2020 வருவாய் அழைப்பில், நிகழ்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சலுகை குறித்து உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், இது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. அடிப்படையில், புதுமையான விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் உத்தி மூலம் அதிக சந்தாதாரர்களை அதன் தளத்துடன் இணைக்க நெட்ஃப்ளிக்ஸ் விரும்புகிறது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் புதிய உள்ளடக்கங்களைக் கொடுத்து ஒரு வார இறுதிக்கு இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்த அனுமதிக்கிறது என்றும் இதனால், அவர்களை நெட்ஃப்ளிக்ஸ் திட்டத்தில் பதிவு செய்வதற்குத் தூண்டப்படலாம் என்றும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு தலைமை அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் குறிப்பிடுகிறார்.

இப்போதைக்கு, ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் நிகழ்வு உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சோதனை அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது தவிர முன்னதாக பெரும்பாலான நாடுகளில், பயனர்களுக்கான 30 நாள் இலவச சோதனை திட்டத்தை ரத்து செய்தது நெட்ஃப்ளிக்ஸ். இந்த சோதனைத் திட்டம் பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச அணுகலை வழங்கப் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர்கள் ஓர் குறிப்பிட்ட திட்டத்தின்கீழ் சேரவேண்டும் அல்லது அதன் அணுகல் பயன்பாடு தானாக ரத்து செய்யப்படும்படியாக இருந்தது.

480p ரெசல்யூஷன் ஸ்ட்ரீமிங்கை வழங்கும் ரூ.199 திட்டம் உள்ளடக்கிய நான்கு வகையான மாதாந்திர திட்டங்களை அதன் மொபைல் பயன்பாட்டிற்கு மட்டுமே நெட்ஃப்ளிக்ஸ் வழங்குகிறது. இரண்டாவதாக, மொபைல், டிவி மற்றும் PC உள்ளிட்டவற்றில் ஒரே திரையில் பயன்படுத்தக்கூடிய 480p ஸ்ட்ரீமிங் கொண்ட ரூ.499 அடிப்படை திட்டத்தையும் இது வழங்குகிறது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் முழு HD தெளிவுத்திறனில் உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய ரூ.649 ஸ்டாண்டர்ட் திட்டம் உள்ளது. இறுதியாக, ரூ.799 பிரீமியம் திட்டம். இது, 4K + HDR தெளிவுத்திறனில் ஸ்ட்ரீமிங் செய்ய உதவுகிறது. அதே நேரத்தில் இதன் உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் நான்கு திரைகளில் பார்க்க முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Netflix offers free access to indian customers netflix offers latest tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X