நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆகியவை இந்தியாவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஓ.டி.டி தளங்கள் ஆகும். இவைகள் விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங், ப்ரீ டெலிவரி, ப்ரீ மியூசிக் உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்குகின்றன. விலைக்கு ஏற்றபடி வேலிடிட்டி நன்மைகள் மாறுபடுகின்றன. இந்த தளங்கள் வழங்கும் திட்டங்கள், பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் 4 சந்தா திட்டங்களை வழங்குகிறது. ரூ.149 தொடங்கி ரூ.649 வரை திட்டங்கள் உள்ளன.
நெட்ஃபிளிக்ஸ் ரூ.149 மொபைல் திட்டம்
இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகளில் மட்டும் பயன்படுத்த முடியும். பயனர்கள் 480p ரெசஸ்யூசனில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
ரூ.199 பேஸிக் திட்டம்
இந்தத் திட்டத்தில் HD (720p) ரெசஸ்யூசனில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம். இந்த திட்டத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். இது மொபைல், டேப்லெட், டிவியில் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
அதோடு ரூ.499 மற்றும் ரூ.649 பிரீமியம் திட்டங்களை வெவ்வேறு பலன்களுடன் நெட்ஃபிளிக்ஸ் வழங்குகிறது.
அமேசான் பிரைம் வீடியோ
அமேசான் பிரைம் வீடியோ 5க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்குகிறது.
அமேசான் பிரைம் மாதாந்திர திட்டம் ரூ. 299
இந்த சந்தா திட்டம் மாதாந்திர கட்டணங்களை அனுமதிக்கிறது மற்றும் இலவச அமேசான் டெலிவரி சேவை, பிரைம் வீடியோக்களுக்கான அனுமதி, பிரைம் மியூசிக், சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் அனைத்து அமேசான் பிரைம் நன்மைகளையும் வழங்குகிறது.
3 மாத திட்டம்
அமேசான் பிரைம் 3 மாத திட்டம் ரூ. 599க்கு வழங்கப்படுகிறது. 3 3 மாத திட்டத்தில் அனைத்து அமேசான் பிரைம் நன்மைகளையும் பெறலாம். 3 மாத திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், ஒரு காலாண்டிற்கு ரூ.78 சேமிக்கிறீர்கள்.
மேலும், ரூ. 1,499, ரூ.999 என வருடாந்திர திட்டங்களை பல்வேறு நன்மைகளுடன் வழங்குகிறது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார்
டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தா
இந்த இலவச சந்தா திட்டத்தில் குறிப்பிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விளம்பரங்களுடன் பார்க்க அனுமதிக்கிறது.
பிரீமியம் மாதாந்திரத் திட்டம் ரூ.299
இந்த மாதாந்திரத் திட்டம் விளம்பரமில்லா திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சிறப்புகள் மற்றும் நேரடி விளையாட்டுகள் உட்பட அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அணுகலை வழங்குகிறது. பயனர்கள் 4K (2160p) ரெசஸ்யூசன் மற்றும் Dolby 5.1 ஆடியோவுடன் 4 சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யலாம்.
ஜியோ சினிமா
ஜியோ சினிமா பிரீமியம் சந்தா ரூ.999 விலையில் வழங்கப்படுகிறது. விளம்பர இல்லா நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கிறது. ஜியோ சினிமா ஒரே ஒரு திட்டத்தை மட்டும் வழங்குகிறது.
எது சிறந்தது?
நெட்ஃபிளிக்ஸ் பல்வேறு வகையான படங்களை (Genres)வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டி.வி நிகழ்ச்சிகளையும், ஜியோ சினிமா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளையும் வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil