scorecardresearch

இனி பாஸ்வேர்டு வேண்டாம்.. ‘passkeys’ அம்சம் அறிமுகம்.. கூகுள் குரோம் புது அப்டேட் என்ன?

கூகுள் குரோமில் ‘பாஸ் கீஸ்’ என்ற புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பாஸ்வேர்டு இல்லாமல் குரோம் தளத்தை பயன்படுத்த முடியும்.

இனி பாஸ்வேர்டு வேண்டாம்.. ‘passkeys’ அம்சம் அறிமுகம்.. கூகுள் குரோம் புது அப்டேட் என்ன?
Google chrome update

கூகுள் போன்று அதன் குரோம் தளமும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக லேப்டாப், கணினிகளில் கூகுள் குரோம் தளம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் குரோமில் ஒரு முறை அக்கவுண்ட் தொடங்கிவிட்டால், அதை வைத்தே நம்முடைய போன், லேப்டாப் என மற்ற சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இந்நிலையில், குரோம் தளத்தில் புது அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குரோம் பயனர்களுக்கு ‘பாஸ் கீஸ்’ அம்சம் அறிமுகப்படுகிறது. அக்டோபரில் இதன் சோதனை தொடங்கிய நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதிலாக பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்படுகிறது. விண்டோஸ் 11, ஆப்பின் மேக், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம்.

பாஸ் கீஸ் என்பது ஒரு தனித்த டிஜிட்டல் அடையாளமாகும் (unique digital identity).இந்த பாஸ் கீஸ் போன், லேப்டாப், கணினி போன்ற சாதனங்களில் பயன்படுத்தலாம்.
பாஸ் கீஸ் பயோமெட்ரிக்ஸ், கைரேகை என எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எளிமையாக சொன்னால், தம்முடைய குரோம் அக்கவுண்ட் மற்ற சாதனங்கள் அல்லது வேறு லேப்டாப்பில் லாக்கின் (log in) செய்தால் பாஸ்வேர்டு கேட்கும். சில நேரங்களில் பாஸ்வேர்டு மறந்து விடுவோம். இந்நிலையில் பாஸ் கீஸ் செட் செய்து விட்டால் எளிதாக பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் பாஸ் கீஸ் Google Password Manager தளத்தில் சேமிக்கப்படுகிறது. ஒரே அக்கவுண்ட் பயன்படுத்தி ஓபன் செய்யும் போது பாஸ்வேர்டு இல்லாமல் எளிதாக பயன்படுத்தலாம்.

பாஸ் கீஸ்

பயனர்கள் பயோமெட்ரிக் சென்சார் (fingerprint or facial recognition), PIN அல்லது பேட்டர்ன் (pattern) மூலம் பாஸ் கீஸ் செட் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டை விட பாஸ் கீஸ் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பயோமெட்ரிக்ஸ் மூலம் பாஸ் கீகள் அமைக்கப்படுவதால், பாஸ்வேர்டுகள் ஹேக் செய்வதை தடுக்க முடியும். புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கூகுள் குரோமில் பாஸ் கீஸ் எவ்வாறு பயன்படுத்துவது?

எப்போதும் போலவே பிற சாதனங்களில் கூகுள் லாக்கின் செய்யும் போது பாஸ்வேர்டு கேட்டும். அதுபோவே தான் பாஸ் கீஸ் பயன்பாடும். பயனர்கள் லாக்கின் செய்யும் போது தங்கள் கைரேகை அல்லது saved passkeys-யை குறிப்பிட்டால் அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும். கூகுள் போன்று பல நிறுவனங்கள் பாஸ்வேர்டு பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பாஸ்வேர்டு பயன்பாடு முற்றிலும் அழிந்து விடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: New google chrome update lets users login without typing passwords here is how it works