Advertisment

ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்: ஃபேமிலி பயனர்களுக்கான அசத்தல் ஆஃபர்

ரூ. 399 விலையில் ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்:  ஃபேமிலி பயனர்களுக்கான அசத்தல் ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. 5ஜி சேவைகளையும் வழங்கி வருகிறது. கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி சேவையை விரிவுபடுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என இரண்டு வகைகளில் ரீசார்ஜ் அம்சம் வழங்கப்படுகிறது. தற்போது ஜியோ பிளஸ் என்ற பெயரில் ஃபேமிலி பயனர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 399 என்ற அடிப்படை விலையில் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒருவர் ரீசார்ஜ் செய்தால் அதனுடன் 3 பயனர்கள் தலா ரூ.99 மட்டும் செலுத்தி ஜியோ பிளஸ் ஃபேமிலி திட்டத்திற்கான அனைத்து பயன்களையும் பெறலாம். அதாவது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்திர கட்டணம் ரூ. 696 என்று கணக்கிடப்பட்டுள்ளது (ரூ. 399 + ரூ. 99 x 3) என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபர் மூலம் இலவச 5ஜி டேட்டா பயன்படுத்தலாம். Netflix, Amazon, JioTV மற்றும் JioCinema சந்தா, ரோமிங் கால் வசதியில் Wi-Fi அழைப்பின் மூலம் நிமிடத்திற்கு ரூ.1 என்ற கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுமைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கான பயனர்கள் ஜியோ ஃபைபருக்கான வைப்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை உள்ளிட்ட சலுமைகள் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

2 திட்டங்கள்

399 ரூபாய்க்கு வழங்கப்படும் திட்டத்தில் குடும்பத்திற்கு மூன்று கூடுதல் இணைப்புகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படும். கூடுதலான 3 இணைப்புகளுக்கு தலா ரூ. 99 செலுத்தி மற்ற சலுகைகளைப் பெறலாம்.

இதேபோல் 799 ரூபாய் திட்டத்தில் 100 ஜிபி டேட்டா, 3 ஆட்-ஆன் இணைப்புகளுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் மெம்பர்ஷிப் சந்தா வழங்கப்படும். கூடுதலான 3 இணைப்புகளுக்கு தலா ரூ. 99 செலுத்த வேண்டும்.

ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்களை எவ்வாறு பெறுவது?

  1. 70000 70000க்கு மிஸ்டு கால் கொடுங்கள்
  2. அடுத்து Security Deposit waiver என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
  3. உங்கள் போஸ்ட்பெய்டு சிம்மை இலவசமாக ஹோம் டெலிவரி செய்ய முன்பதிவு செய்யுங்கள்
  4. ஹோம் டெலிவரியின் போது, ​​தேவைப்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு மேலும் 3 சிம் கார்டுகளை கேட்டுப் பெறவும்.
  5. applicable processing fee ரூ.99 கட்டணமாக செலுத்தவும்.
  6. MyJio app அக்கவுண்ட் மூலம் உங்கள் 3 குடும்ப உறுப்பினர்களின் நம்பர்களையும் லிங்க் செய்து பலன்களை பெறுங்கள்.
Jio Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment