நிலவின் தென்துருவத்தில் செப்.22-ம் தேதி மீண்டும் சூரிய உதயம் ஏற்பட்டது. உறக்க நிலையில் வைக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை. திட்டத்தின் நோக்கம் அனைத்தையும் சந்திரயான் 3 கருவிகளை நிறைவு செய்த நிலையில் மீண்டும் செயல்பட வைப்பது கடினம் என்று உறுதியாகியுள்ளது.
சந்திரயான் 3 உள்ள நிலவின் தென்துருவத்தில் மீண்டும் இரவு தொடங்கி உள்ள நிலையில் இஸ்ரோவுக்கு அடுத்த விடியலாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ககன்யான் திட்டத்தின் முதல் சோதனையை செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது.
ககன்யான் பணி
இந்திய விண்வெளி நிறுவனம் சனிக்கிழமையன்று, ஃப்ளைட் டெஸ்ட் வெஹிக்கிள் அபார்ட் மிஷன்-1, (டி.வி-டி1) க்கு தயாராகி வருவதாகக் கூறியது. இது ககன்யான் பயணத்திற்கான மனிதர்கள் இல்லாத சோதனை (uncrewed flight test ) முயற்சியாகும். இந்த சோதனை க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் செயல்திறனை நிரூபிக்க செய்யப்படுகிறது.
ககன்யான் பணியின் குழு தொகுதி (crew module) விண்வெளி வீரர்கள் பயணத்தின் போது அழுத்தப்பட்ட பூமி போன்ற நிலைமைகளுடன் (pressurised Earth-like conditions) தங்கியிருக்கும் இடமாக இருக்கும். ஆனால் TV-D1 சோதனையில், க்ரூ மாட்யூல் unpressurised version ஆக இருக்கும்.
மனிதர்கள் இல்லாத unpressurised version ஆக இருந்தாலும் ககன்யான் முதன்மை திட்டத்திற்கான உண்மையான crew module அளவு மற்றும் எடை ஆகியவையே இந்த சோதனை தொகுதியும் கொண்டிருக்கும். வேக குறைப்பு மற்றும் மீட்புக்கான அனைத்து அமைப்புகளையும் இந்த தொகுதி கொண்டிருக்கும்.
3 விண்வெளி வீரர்கள்
ககன்யான் திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இஸ்ரா திட்டமிட்டுள்ளது. 3 நாட்கள் தங்க வைத்து பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இஸ்ரோ மனித விண்வெளிப் பயணத் திறன்களை நிரூபிக்க முடியும் என நம்புகிறது. தற்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனித விண்வெளி பயணங்களை செய்து வருகின்றன.
எனினும் ககன்யான் திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ பல தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும், அவை பணிக்கு முக்கியமானதாக இருக்கும். முதலில் மனிதர்கள் ஏற்றுச் செல்லும் வகையில் ராக்கெட் அமைப்பு, லைஃப் சப்போர்ட் சிஸ்டம்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அவசரகாலத்தில் தப்பிக்க எமர்ஜென்சி எஸ்கேப் அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட வேண்டும். அதே போன்று வீரர்களுக்குப் பயிற்சி, மீட்பு மற்றும் குழுவினரின் மறுவாழ்வு போன்ற பல துணை அம்சங்களிலும் இஸ்ரோ பணியாற்ற வேண்டும்.
Human-rated LVM3
முன்னதாக GSLV Mk-III என அழைக்கப்பட்ட Launch Vehicle Mark-III (LVM3), இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். ககன்யான் திட்டத்திற்கும் இந்த ராக்கெட் பயன்படுத்தப்படும் நிலையில் மனிதர்களை சுமந்து செல்வதால் அதற்கு ஏற்றால் போல் ராக்கெட் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். இஸ்ரோ இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.