கைபேசியின் ஆரம்பக் காலத்தில் முன்னணியில் இருந்த நோக்கியா. தற்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 2யை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரூ. 6,999க்கு இந்தியாவில் இந்த கைபேசி வெளி வர உள்ளது. அதாவது அதே விலையில் இருக்கும் சியோமியின் ரெட்மி 4A, ரெட்மி Y1 லைட் மற்றும் மோட்டோரோலாவின் மோட்டோ சி பிளஸ் உடன் நோக்கியா சந்தையில் போட்டிப்போடும்.
மேலும் சந்தையில் iVoomi என்னும் புதிய வரவு ரூ 5,000 கீழ் ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது.
நோக்கியா 2: விலை மற்றும் அம்சங்கள்.
நோக்கிய 5 அங்குல எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212, 1ஜிபி RAM மற்றும் 8 ஜிபி செயலியை கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய சந்தையில் இதை விட குறைந்த விலையில் அதிக RAMஐ மற்ற நிறுவனங்கள் வழங்குகிறது. மேலும் இதே குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 செயலி தான் ஜியோ கைபேசியிலும் உள்ளது. அதனால் நோக்கியா 2 மாறுபட்டோ புதுமையாகவோ எதையும் அளிக்கவில்லை.
7.1 ஆண்ட்ராய்ட் நோகட்டை இக்கைபேசி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் ஓரியோ அப்டேட்டை வெளியிடும் என தெரிவித்தது. நீண்ட பேட்டரிக்கு பெயர்போன நோக்கியா இக்கைபேசியிலும் 4100 mAh பேட்டரியை கொண்டுள்ளது. பின்பக்க கேமிரா 8 மெகா பிக்ஸலும் முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது. 6999 விலையில் இரண்டு நாள் நீடிக்கும் பேட்டரியை கொண்டு சந்தையில் இருக்கும் மற்ற கைபேசிகளை விட சிறந்த ஸ்மார்ட் போனாகவே இருக்கிறது.
சியோமி ரெட்மி 4ஏ: விலை மற்றும் அம்சங்கள்
ரூ 5,999க்கு 2ஜிபி RAM, 16ஜிபி மற்றும் ரூ 6,999க்கு 3ஜிபி RAM and 32 ஜிபி என்று இரு மாடல்களாக சியோமி ரெட்மி 4ஏ விற்கப்படுகிறது. நோக்கியாவை போலவே 5 அங்குல எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி, பின்பக்க கேமிரா 13 மெகா பிக்ஸலும் முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது. இந்த கைபேசியின் முக்கிய அம்சம் அதிக ஸ்டோரேஜ், அதிக RAM இந்த கைபேசியில் உள்ளது. ரூ 7,000க்கு நல்ல குறிப்புகளை கொண்ட ஸ்மார்ட்போன் இது.
மோட்டோ c பிளஸ்: விலை மற்றும் அம்சங்கள்
ரூ 6,499க்கு 2ஜிபி RAM, 16ஜிபி, 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே என மற்ற ஸ்மார்ட்போன்களை போலவே கொண்டுள்ளது. இந்த கைபேசியின் மிக முக்கிய குறிப்பு 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது மேலும் மீடியாடெக் MTK6737 குவாட் கோர் 1.3Ghz செயலியை கொண்டுள்ளது. பின்பக்க கேமிரா 8 மெகா பிக்ஸலும் முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது.
நோக்கியா போல் மத்த பட்ஜெட் ஸ்மார்ட்பொன்கள்
பானசோனிக் எழுகா ஐ5 ரூ 6,499க்கு 2ஜிபி RAM, 16ஜிபி, 5 அங்குல எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பின்பக்க கேமிரா 13 மெகா பிக்ஸலும் முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இதில் உள்ளது.
இன்போக்கஸ் டர்போ 5 ரூ 6,499 5000 mAh பேட்டரி கொண்டு வந்துள்ளது. மற்ற கைபேசி போல 2ஜிபி RAM, 16ஜிபி, 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
சந்தையில் ரூ 7,000க்கு நல்ல ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.