நோக்கியா 5 ஸ்மாட்பானை வாங்க விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மாட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிடும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நோக்கியாவின் 3310 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன் வெளியான நிலையில், தற்போது நோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு அமேசானில் தொடங்குகிறது.
இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதே விலையில் உள்ள மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 4, மோட்டோ ஜி5 சீரியஸ், யூ யூரேக்கா ப்ளாக், சாம்சங் கேலக்ஸி ஜே ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் களம் இறங்கியுள்ளது இந்த நோக்கியா 5. எனினும், இந்த நோக்கியா 5 ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதால். , ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக தளத்தில் இந்த போன் குறித்து பட்டியலிடப்படவில்லை. அதானல், டீலரை அணுகியே இந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ள இயலும் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக குரோமா, நோக்கியா 3 ஸ்மார்ட்போனை விற்பனை செய்தது. பின்னர் ஆன்லைனிலும் கொண்டுவந்தது. ஆனாலும், நோக்கியா 5 எப்போது விற்பனை செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பிடும்படியாக, இங்கிலாந்தில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் வரை தாமதமாகியுள்ளது.
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்
- மெட்டல் உடலமைப்பு
- 5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸர்
- 2ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
- PDAF-வுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்
- 4ஜி எல்டிஇ சட்போர்ட்
நோக்கியா 5 வாங்கலாமா அல்லது நோக்கியா 6 வாங்கலாமா?
ரூ.13,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், நோக்கியா 6-ன் விலை நோக்கியா 5-யை விட ரூ.2000 அதிகம். அதன்படி பார்க்கும் போது, நோக்கியா 6-ல் கொஞ்சம் பெரியதாக 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 3ஜி.பி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அதோடு 16 எம்.பி ரியர் கேமரா என நோக்கியா 5-யை விட கூடுதல் சிறம்சங்களை கொண்டுள்ளது.
நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தரம்வாய்ந்ததாக எச்எம்டி குலோபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்டைலிஸாக இருக்கின்றன. நோக்கியா பிராண்டில் அதிக சிறம்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நோக்கியா 6 சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.