நோக்கியா 5- ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக்கூடியது. எனவே, பிரபலமான ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வரவில்லை. எனினும் நோக்கியா 6 அமேசானில் பிரத்யேக விற்பனைக்கு வரவுள்ளது.
நோக்கியா 5 ஸ்மாட்போனின் முன்பதிவு ஆஃ;ப்லைனில் இன்று தொடங்கியது. எச்.எம்.டி குளோபல் நிறுவனம் முன்னதாக நோக்கியா 5 ஸ்மாட்போன் ஆஃப்லைனில் மட்டுமே பிரத்யேகமான விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படியே, பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் நோக்கியா 5 விற்பனைக்கு வரவில்லை. ரூ.12,899 என்ற விலையில் முன்பதிவு செய்யப்படும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன், உறுதியாக எப்போது வெளியாகும் என எச்.எம்.டி நிறுவனம் அறிவிக்கவில்லை.
எனினும், நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விடிரவில் ஆன்லைனில் பிரத்யேகாமாக விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா ஸ்மார்போனை ஆன்லைனில் வாங்க நினைப்பவர்கள் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ள முடியும்.
வோடபோனின் சிறப்பு சலுகை
நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 போன்ற ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் நிறுவனமானது கூடுதல் டேட்டா சலுகையை வழங்குகிறது. இதேபோல நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும் எனவும் வோடபோன் அறிவித்துள்ளது.
நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்ற ஸ்மார்போனை வாங்குபவர்களுக்கு 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். 1 ஜி.பி அல்லது அதற்கு மேலான டேட்டாவுக்காக ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகைகை வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேட்டா சலுகை 3 மாதங்களுக்கு என்பது கவனிக்கத்தக்கது.
எச்.எம்.டி குளோபல் நிறுவனமம் இசட்.இ.ஐ.எஸ்.எஸ்(ZEISS) என்ற கேமரா லென்ஸ் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்படுவதாவது: சாஃட்வேர், சேவை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். மேலும், ஸ்கிரீன் குவாலிட்டி, டிசைன் ஆகியவற்றையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்
- மெட்டல் உடலமைப்பு
- 5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸர்
- 2ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
- PDAF-வுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்
- 4ஜி எல்டிஇ சட்போர்ட்
நோக்கியாவில் எதை வாங்கலாம்?
ரூ.13,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், நோக்கியா 6-ன் விலை நோக்கியா 5-யை விட ரூ.2000 அதிகம். அதன்படி பார்க்கும் போது, நோக்கியா 6-ல் கொஞ்சம் பெரியதாக 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 3ஜி.பி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அதோடு 16 எம்.பி ரியர் கேமரா என நோக்கியா 5-யை விட கூடுதல் சிறம்சங்களை கொண்டுள்ளது.
நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தரம்வாய்ந்ததாக எச்எம்டி குலோபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்டைலிஸாக இருக்கின்றன. நோக்கியா பிராண்டில் அதிக சிறம்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நோக்கியா 6 சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.