நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடக்கம்!

எச்.எம்.டி குளோபல் நிறுவனம் முன்னதாக நோக்கியா 5 ஸ்மாட்போன் ஆஃப்லைனில் மட்டுமே பிரத்யேகமான விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது.

நோக்கியா 5- ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக்கூடியது. எனவே, பிரபலமான ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வரவில்லை. எனினும் நோக்கியா 6 அமேசானில் பிரத்யேக விற்பனைக்கு வரவுள்ளது.

நோக்கியா 5 ஸ்மாட்போனின் முன்பதிவு ஆஃ;ப்லைனில் இன்று தொடங்கியது. எச்.எம்.டி குளோபல் நிறுவனம் முன்னதாக நோக்கியா 5 ஸ்மாட்போன் ஆஃப்லைனில் மட்டுமே பிரத்யேகமான விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படியே, பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் நோக்கியா 5 விற்பனைக்கு வரவில்லை. ரூ.12,899 என்ற விலையில் முன்பதிவு செய்யப்படும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன், உறுதியாக எப்போது வெளியாகும் என எச்.எம்.டி நிறுவனம் அறிவிக்கவில்லை.

எனினும், நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விடிரவில் ஆன்லைனில் பிரத்யேகாமாக விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா ஸ்மார்போனை ஆன்லைனில் வாங்க நினைப்பவர்கள் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ள முடியும்.

வோடபோனின் சிறப்பு சலுகை

நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 போன்ற ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் நிறுவனமானது கூடுதல் டேட்டா சலுகையை வழங்குகிறது. இதேபோல நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும் எனவும் வோடபோன் அறிவித்துள்ளது.

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்ற ஸ்மார்போனை வாங்குபவர்களுக்கு 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். 1 ஜி.பி அல்லது அதற்கு மேலான டேட்டாவுக்காக ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகைகை வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேட்டா சலுகை 3 மாதங்களுக்கு என்பது கவனிக்கத்தக்கது.

எச்.எம்.டி குளோபல் நிறுவனமம் இசட்.இ.ஐ.எஸ்.எஸ்(ZEISS) என்ற கேமரா லென்ஸ் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்படுவதாவது: சாஃட்வேர், சேவை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். மேலும், ஸ்கிரீன் குவாலிட்டி, டிசைன் ஆகியவற்றையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

nokia5

நோக்கியா 5 சிறப்பம்சங்கள்

  • மெட்டல் உடலமைப்பு
  • 5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸர்
  • 2ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • PDAF-வுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா
  • 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்
  • 4ஜி எல்டிஇ சட்போர்ட்

நோக்கியாவில் எதை  வாங்கலாம்?

ரூ.13,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், நோக்கியா 6-ன் விலை நோக்கியா 5-யை விட ரூ.2000 அதிகம். அதன்படி பார்க்கும் போது, நோக்கியா 6-ல் கொஞ்சம் பெரியதாக 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 3ஜி.பி ரேம்,  32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அதோடு 16 எம்.பி ரியர் கேமரா என நோக்கியா 5-யை விட கூடுதல் சிறம்சங்களை கொண்டுள்ளது.

நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தரம்வாய்ந்ததாக எச்எம்டி குலோபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்டைலிஸாக இருக்கின்றன. நோக்கியா பிராண்டில் அதிக சிறம்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நோக்கியா 6 சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close