நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 15-முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மாட்போனானது, ஆஃலைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ம்.டி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இந்த நோக்கியா 5 ஸ்மார்போனாது, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது. நோக்கியா-5 ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதை எச்.எம்.டி நிறுவனமும் உறுதி படுத்தியுள்ளது.
எனவே, அனைத்து முன்னணி மொபைல் ஸ்டோர்களிலும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நோக்கியா-5 ஸ்மாட்போனை வாங்கிக் கொள்ள முடியும் என எச்.எம்.டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.12.499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5 ஸ்மார்ட்போனாது, மேட் பிளாக், சில்வர், டெம்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் போன்ற 4 நிறங்களில் வெளிவருகிறது. தொடக்கத்தில் மேட் ப்ளாக் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும், சில்வர், டெம்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் போன்ற நிறங்கள் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான நோக்கியா 3 ஸ்மார்ட்போனாது ரூ.9,499 என்ற விலையில் விற்பனையில் உள்ளது. இதேபோல, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 ஸ்மாட்ர்போனானது ஆன்லைனில் கிடைக்கக்கூடியது. அமேசான் இணையதளத்தில் இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
நோக்கியா 5 ஸ்மார்ட்போனாது, ரெட்டிமி நோட் 4 மற்றும் மோட்டோ ஜி5 போன்ற போன்ற ஸ்டார்ட்போன்களில் விலையோடு ஒப்பிடும்படி உள்ளது.
நோக்கியா 5 -ன் சிறப்பம்சங்கள்
- மெட்டல் யுனிபாடி டிசைன்
- 5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசஸர்
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜி.பி ஸ்டோரேஜ்
- 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா
- 3000 mAh பேட்டரி திறன்
- முன்பகுதியில் ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத்தலைவர் அஜய் மேத்தா, நோக்கியா 5 ஸ்மார்ட்போன் குறித்து தெரிவித்துள்ளதாவது: தற்போதைய நிலையில் மக்கள் கையில் வைத்துக் கொள்ளும் வகையில் அடக்கமான மொபைல் போன்களையே விரும்புகின்றனர். அதன்படி பார்க்கும் போது 5.2 இன்ச் மற்றும் தனித்துவமான டிசைனில் இந்த நோக்கியா 5 ஸ்மாட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நோக்கியா 5-ன் விற்பனை துவக்க நாளையொட்டி சிறப்பு ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத காலத்திற்கு 5 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேக்மைட்ரிப் மூலமாக ஹோட்டல், உள்ளூர் விமான போக்குவரத்து ஆகியவற்றிற்கு ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.