Advertisment

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்! ஃபர்ஸ்ட்லுக் வீடியோ

நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nokia, Nokia 6, HMD Global

எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமேசான் வணிக தளத்தில் நாளை(ஆகஸ்ட் 23) முதல்விற்பனைக்கு வருகிறது. நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது. நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நாளை(ஆகஸ்ட் 23) மதியம் 12 மணிக்கு அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. தற்போதைய முன்பதிவானது அமேசானில் முடிந்துவிட்டது. எனினும், ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் அடுத்த முன்பதிவு அமேசானில் நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ரூ.14,999 விலையில் இந்த நோக்கியா 6 விற்பனைக்கு வருகிறது.

நோக்கியா சிறப்பம்சங்கள்

  • 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே (1920 x 1080 பிக்சல்ஸ்)
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
  • 4 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 128 ஜி.பி வரை மெமரியை அதிகரித்துக் கொள்ள முடியும்)
  • 3,000mAh திறன் கொண்ட பேட்டரி,
  • ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. மேலும்,  ஆண்ட்ராய்டு ஓரியோவிற்கு மேம்படுத்தப்படும் என எச்.எம்.டி நிறுவனம் உறுதியளித்துள்ளது.
  • டொல்பி ஆடோம் டெக்னாஜியுடன் கூடிய ஸ்டீரியோ டுயல் ஸ்பீக்கர்.

நோக்கியா 6 ஃபர்ஸ்ட்லுக்

ரெட்மி நோட் 4, லெனோவா K6 நோட், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கூட்பேட் கூல்ப்ளே 6 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஆகிவற்றைப் போன்று இந்த நோக்கியா 6 ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனாகும்.

ஆனாலும், ரெட்மி நோட் 4 ஸ்மாட்போனானது தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. டுயல் ரியர் கேமரா வசதியுடன்கூடிய லெனோவா K6 நோட், 14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 64 ஜி.பி ஸ்டேரேஜ் கொண்ட வகையும் உள்ளது. ஆனால், அந்த வகையான ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இதேபோல,நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எச்.எம்.டி தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nokia Amazon Nokia 6
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment