எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி முதல் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. ஆன்லைன் வணிகதளமான அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆப்பிள், சாம்சங், ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் ப்ரீமியம் பிரிவு ஸ்மார்ட்போன்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ப்ரீமியம் பிரிவு மொபைல்களில் வரிசையில் நோக்கியா 8-ம் தற்போது இடம்பிடித்துள்ளது. பின்லாந்தைச் சேர்ந்த எச்.எம்.டி நிறுவனமாது, நோக்கியா 8 ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் வெளியிட்டது.
நோக்கியா 8-ன் சிறம்பம்சத்தை பொறுத்தவரையில், 5.3 இன்ச் 2K டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டா-கோர் பிராசஸருடன் வெளிவரவுள்ள இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன், 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ளது. அதோடு, மைக்ரோ எஸ்.டி கார்டு(256 ஜி.பி வரை) பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் இயக்கக் கூடியது என்றும், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச்.எம்.டி குளோபல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. 13 எம்.பி டுயல் ரியர் கேமராவும், 13 எம்.பி செல்ஃபி கேமராவும் உள்ளது.
இதில் போத்தி (Bothie) என்ற சிறம்பம்சம் உள்ளது தனித்துவமானது. அதாவது, மற்ற ஸ்மார்ட்போன்களில் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமராவில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ரியர் கேமரா மற்றும் செல்ஃபி கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். போத்தி சிறம்பம்சத்தின் மூலம் யூடியுப், பேஸ்புக் போன்றவற்றில் நேரடியாக லைவ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தி என்ற சிறப்பம்சத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் தான் முதல்முறையாக அறிமுகம் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
எச்.எம்.டி நிறுவனமானது நோக்கியா பிராண்டில் தயாரித்து, விற்பனை செய்யும் உரிமையை வாங்கியிருந்தது. இதையடுத்து, முன்னதாக நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி குளோபல் ரிலீஸ் செய்திருந்தது.