எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 8 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 599 யூரோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனாது ரூ.45,000 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்லாந்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீன உற்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 13MP+13MP என்ற டுயல் கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனில், குறிப்பிடும்படியாக, செல்ஃபி கேமராவும் 13-எம்.பி என்பது கவனிக்கத்தக்கது. மேலும், செல்ஃபி கேமரா மற்றும் ரியர் கேமரா ஆகியவை 4K வீடியோ சப்போர்ட் செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
“போதி” மோடு என்ற சிறப்பம்சம் இந்த நோக்கியா 8-ல் உள்ளது. இதன் மூலம் ரியர் மற்றும் செல்ஃபி கேமரா ஒரே சமயத்தில் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைபடங்களை எடுக்க முடியுமாம்.
- சிறப்பம்சங்கள்
- 5.3 இன்ச் IPS QHD டிஸ்ப்ளே
- 2560 x 1440 ரிசொலூசன்
- நோக்கியா 8, பாலிஸ்டு ப்ளூ, டெம்பர்டு ப்ளூ, ஸ்டீல், பாலிஸ்டு காப்பர் உள்ளிட்ட நான்கு நிறங்களில் வெளிவருகிறது.
- 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 256 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)
- குவல்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர்
- டுயல் ரியர் கேமரா: 13 எம்.பி + 13 MP எம்.பி
- செல்ஃபி கேமரா 13 எம்.பி
- 3090 mAh பேட்டரி(ரிமூவ் செய்ய முடியாதது)
- நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.
அதோடு, அடுத்து வரும் ஓ.எஸ்-க்கு விரைவில் மேம்படுத்தப்படும் என்று எச்.எம்.டி குளோபல் தெரிவித்துள்ளது.