டுயல் ரியர் கேமரா வசதியுடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ரியர் மற்றும் செல்ஃபி கேமராவை ஒரே சமயத்தில் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைபடங்களை எடுக்க முடியுமாம்.

எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 8 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 599 யூரோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனாது ரூ.45,000 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்லாந்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீன உற்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 13MP+13MP என்ற டுயல் கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனில், குறிப்பிடும்படியாக, செல்ஃபி கேமராவும் 13-எம்.பி என்பது கவனிக்கத்தக்கது. மேலும், செல்ஃபி கேமரா மற்றும் ரியர் கேமரா ஆகியவை 4K வீடியோ சப்போர்ட் செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

“போதி” மோடு என்ற சிறப்பம்சம் இந்த நோக்கியா 8-ல் உள்ளது. இதன் மூலம் ரியர் மற்றும் செல்ஃபி கேமரா ஒரே சமயத்தில் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைபடங்களை எடுக்க முடியுமாம்.

  • சிறப்பம்சங்கள்
  • 5.3 இன்ச் IPS QHD டிஸ்ப்ளே
  • 2560 x 1440 ரிசொலூசன்
  • நோக்கியா 8, பாலிஸ்டு ப்ளூ, டெம்பர்டு ப்ளூ, ஸ்டீல், பாலிஸ்டு காப்பர் உள்ளிட்ட நான்கு நிறங்களில் வெளிவருகிறது.
  • 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 256 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)
  • குவல்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர்
  • டுயல் ரியர் கேமரா: 13 எம்.பி + 13 MP எம்.பி
  • செல்ஃபி கேமரா 13 எம்.பி
  • 3090 mAh பேட்டரி(ரிமூவ் செய்ய முடியாதது)
  • நோக்கியா 8 ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.

அதோடு, அடுத்து வரும் ஓ.எஸ்-க்கு விரைவில் மேம்படுத்தப்படும் என்று எச்.எம்.டி குளோபல் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close