Advertisment

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நார்ட் 3 இந்த வாரம் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

OnePlus Nord 3 ஒன்பிளஸ் நார்ட் 3 ஜூலை 5-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OnePlus Nord 3 5G இந்தியாவில் ஜூலை 5 அன்று அறிமுகம்

OnePlus Nord 3 5G இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் 3 இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஜூலை 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் அதே நாளில் நிறுவனம் Nord CE 3 என அழைக்கப்படும் Nord சீரிஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நார்ட் 3 பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. சூப்பர் ஃப்ளூயட் டிஸ்ப்ளே, Sony கேமரா உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

Advertisment

ஒன்பிளஸ் நார்ட் 3 சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் 20 ஹெர்ட்ஸ் "சூப்பர் ஃப்ளூயட் டிஸ்ப்ளே" உடன் பிளாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 2 நிறங்களில் போன் அறிமுகப்படுத்தப்படுகிறது. டெம்பஸ்ட் கிரே மற்றம் மிஸ்டி கிரீன் நிறத்தில் வருகிறது. ஃபோன் Sony IMX890 பிரைமரி கேமரா + OIS ஆதரவுடன் வரும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

OnePlus Nord 3 ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.74-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9000 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. நார்ட் போன் 16ஜிபி வரை ரேம் உடன் அறிமுகப்படுத்தப்படும் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என ட்ரிபிள் கேமரா வசதி கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது

OnePlus Nord 3 ஆனது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.

மென்பொருளைப் பொறுத்தவரை, OnePlus Nord 3 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 13.1 உடன் அறிமுகப்படுத்தப்படலாம்.

விலை

OnePlus Nord 3 ஸ்மார்ட் போன் 8ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னஸ் ஸ்டோரேஜ் போன் ரூ.32,999 என்ற அடிப்படை விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Oneplus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment