நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சீனாவின் லட்சியத் திட்டத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்தில் விரிவடைந்து வரும் பாட்னர்களில் தற்போது பாகிஸ்தான் இணைந்துள்ளது.
இது தொடர்பாக சீன ப்ரீமியர் (பிரதமர்) மற்றும் பாகிஸ்தான் தற்காலிகப் பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் இடையே கடந்த புதன்கிழமை பெய்ஜிங்கில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் நிலவு ஆராய்ச்சி நிலையத்திற்குத் தேவையான பொறியியல் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் ஆகிய உதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் உலகில் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக மாறுவதை இலக்காகக் கொண்ட சீனா, ஏற்கனவே ரஷ்யா, வெனிசுலா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் இருந்து ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/pakistan-joins-chinas-club-of-lunar-base-partners-8994407/
மேலும் 2030-ம் ஆண்டுக்குள் சீனா தனது விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் நாசா தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில் சீனாவின் இந்த திட்டம் போட்டியிடுகிறது. நாசா டிசம்பர் 2025-ல் அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“