/indian-express-tamil/media/media_files/2024/11/21/7N7fTgIqYA4d4LRCnf76.webp)
பிரபல டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம் (Paytm) One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வெளியே யு.பி.ஐ வசதியை பயன்படுத்தும் வகையில் பேடிஎம் தளத்தில் புதிதாக இன்டர்நேஷனல் யு.பி.ஐ வசதியை அறிமுகம் செய்துள்ளது.
சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த வசதியை வழங்குகறிது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சிங்கப்பூர், பிரான்ஸ், மொரீஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் பேடிஎம் ஆப் பயன்படுத்தி ஷாப்பிங், உணவு மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு பணம் செலுத்தலாம் எனக் கூறியுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
Manual ஆக நீங்களே எனெபிள் செய்ய பேடிஎம் ஆப் சென்று சர்ச் பார் சென்று அதில் ‘International UPI’ எனக் கொடுக்கவும். . அதில் இப்போது இந்தியாவிற்கு வெளியே பேமெண்ட் செய்ய உங்கள் யு.பி.ஐ ஐ.டி-ஐ இணைக்க சொல்லி கேட்கும். அதை கொடுக்கவும்.
அடுத்தாக இவ்வளவு நாள் இன்டர்நேஷனல் யு.பி.ஐ வசதி எனெபிள் செய்யப்பட வேண்டும் என்று கேட்கும் 1 நாள் முதல் அதிகபட்சமாக 9 நாட்கள் வரை கொடுக்க முடியும். இதன் பின் பாதுகாப்பு கருதி பேடிஎம் தானாகவே அந்த வசதியை டிஸ்ஏபிள் செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.