Advertisment

உங்க லேப்டாப் ஸ்லோ ஆகிறா? பயன்படுத்த முடியவில்லையா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ செய்யுங்க

உங்கள் லேப்டாப் ஸ்பீடு செய்ய இந்த 4 ட்ரிக்ஸை செய்து பாருங்க.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Most modern

Most modern Windows PCs support storage and RAM upgrade

இன்றைய காலத்தில் கணினி, லேப்டாப் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் கணினி, லேப்டாப் பயன்பாடுத்துகிறோம். அந்த வகையில் லேப்டாப் ஹேங், ஸ்லோ ப்ராஸர் ஆகியவற்றை உணர்ந்திருப்போம். அதுவும் முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது லேப்டாப் ஹேங் ஆவது கோபத்தை ஏற்படுத்தும். ஸ்டோரேஜ், மெமரி, நிறைய செயலி, பேக்கிரவுண்ட் ஆப் ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு இருக்கலாம். இந்நிலையில் லேப்டாப் ஸ்பீடு, பவர் கெய்ன் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

Remove services from startup apps

நீங்கள் Windows PC இல் ஒரு புதிய ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும் போது, உங்களிடம் அனுமதி கேட்கும். இது தொடக்கத்திலேயே செய்யப்படும். அதன்பின் நீங்கள் எப்போது எல்லாம் லேப்டாப் ஆன் செய்கிறீர்களோ அந்த ஆப் தானாகவே பேக்கிரவுண்ட்டில் ரன் ஆகும். இது தேவையற்ற பவரை பயன்படுத்தும். இதை சரி செய்ய வேண்டும்.

publive-image

Windows 11-ல் startup apps என தேடி உங்களுக்கு தேவையில்லா அல்லது எப்போதாவது பயன்படுத்தக் கூடிய ஆப்களை ஆப் செய்து வைக்கவும். இது லேப்டாப் ஸ்பீடு, பவர் அதிகப்படுத்த உதவும்.

Uninstall apps

பொதுவாகவே ஒரு கணிணி லேப்டாப்பில் மூன்றாம் தரப்பு செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இதில் சில நாம் பயன்படுத்துவோம். மற்றவற்றை பயன்படுத்த மாட்டோம். ஆகவே பயன்படுத்தாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்து ஸ்டோரேஜ் அதிகப்படுத்துவது ஸ்லோ ப்ராஸசிங் பிரச்சினைக்கு உதவியாக இருக்கும்.

publive-image

இதற்கு கணிணி லேப்டாப்பில் செட்டிங்ஸ் பக்கம் சென்று > ஆப்ஸ் > Installed apps செலக்ட் செய்யவும். இதில் தேவையற்ற ஆப்களை அன்இன்ஸ்டால் செய்யவும். இதிலும் கவனமாக செய்ய வேண்டும். system-specific ஆப்களை டெலிட் செய்து விடாமல் இருக்க வேண்டும். Boot loop ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்.

Adjust power mode

விண்டோஸ் 11-ல் இயங்கும் லேப்டாப்பில், பவர் மோட் “best performance” என இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். இப்போது வரும் பெரும்பாலான லேப்டாப்பில் “best power efficiency” or “balanced” mode என கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யப்படும்.

பவர் மோட் மாற்ற செட்டிங்கஸ் > சிஸ்டம் > பவர் & பேட்டரி >பவர் மோட் கொடுத்து “best performance” கிளிக் செய்யவும்.

publive-image

Upgrade storage and RAM

முந்தைய வழிமுறைகளை ஃபாலோ செய்தும் கணினி லேப்டாப் ஸ்லோவாக இருந்தால், வன்பொருளை மேம்படுத்தவும், குறிப்பாக லேப்டாப் வாங்கி நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்றால் அது HDD கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதிக பயன்பாடு லேப்டாப் ஸ்லோவாக காரணமாகும். அதனால் SSD (SATA அல்லது NVMe) க்கு மேம்படுத்துவது, OS பூட்டிங் மற்றும் ஆப் லோடிங் ஆகியவைற்றை மேம்படுத்தும். அதே போல் ரேம் 8 முதல் 16 வரை மேம்படுத்துவது உதவியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment