Planet Parade 2024: பிளானட் பரேட்டு என்று அழைக்கப்படும் கிரக அணிவகுப்பு ஜூன் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் (Mercury, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune) சூரியனை ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வந்து அவை ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
starwalk.space-ன் கூற்றுப்படி, ஜூன் 3-ம் தேதி சூரிய உதயத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன், கிரக அணிவகுப்பு உலகம் முழுவதும் தெரியும். இருப்பினும், சில நாடுகளில் இந்த நிகழ்வை ஜூன்3- க்குப் பிறகு மறுநாள் பார்க்க முடியும்.
பிளானட் பரேட்டு ஏன் நடக்கிறது?
பிளானட் பரேட் என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வுவாகும். இதில் சிறப்பு ஏதும் இல்லை தான். ஆனால் ஜுன் 3 நடைபெறும் நிகழ்வு சிறப்பானதாகும். ஏனெனில் பொதுவாக 2-3 கோள்கள் நேர்கோட்டில் அணிவகுக்கும். ஆனால் இங்கு 6 கோள்கள் அடுத்தடுத்து அணிவகுத்து காட்சியளிக்க உள்ளன.
எங்கு, எப்படி காணலாம்?
பிளானட் பரேட் 2024-க் காண சிறந்த இடம் தெளிவான வானம் தெரியும் இடம், குறைந்த ஒளி மாசு, கட்டிடங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு முன் காணலாம். வெறும் கண்களால் பார்க்கும் போது நீங்கள் மார்ஸ் மற்றும் சார்ட்டனை மட்டும் காண முடியும் ஏனெனில் அவை மட்டும் தான் மற்ற 4 கோள்களை விட பெரியது. இதுவே நீங்கள் பைனாக்குலர், டெலஸ்கோப் பயன்படுத்திப் பார்த்தால் அனைத்து கோள்களையும் அழகாக ஓரே நேர்கோட்டில் இருக்கும் அரிய நிகழ்வை காணமுடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“