ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் காய்கறி வாங்குவது வரை அனைத்திற்கும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சாம்சங், ரியல்மி எனப் பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் விதவிதமான அம்சங்களுடன் மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இளைஞர்களை கவரும் வகையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரூ. 15,000 கீழ் பட்ஜெட் விலையில் சிறந்த முன்னணி நிறுவன ஸ்மார்ட் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Poco X4 Pro - 5G பேண்ட் போன்
ரூ.15,000 கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்களில் Poco X4 Pro ஒன்றாகும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்பட்ட 6.67-இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஃபுல்எச்டி+ AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. பிரபலமான ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
Poco X4 Pro- ஆனது 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் மூலம் 64எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. அதேசமயம் போனின் முன்புறம் 16எம்பி செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி உள்ளது. இது MIUI 13 இல் இயங்குகிறது மற்றும் 7 5G பேண்டுகளை ஆதரிக்கிறது.
கருப்பு, ப்ளு, மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB RAM உடன் பிளிப்கார்ட்டில் ரூ. 14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Realme 9i 5G
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 9i 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான Realme UI 3.0 இல் இயங்குகிறது. MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 6.6-இன்ச் 90Hz IPS LCD டிஸ்பிளே கொண்டுள்ளது, இது பாண்டா கிளாஸால் பாதுகாக்கப்படுகிறது.
2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் மூலம் 50எம்பி ப்ரைமரி சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்புடன் இந்த போன் வருகிறது. இது 18W இல் சார்ஜ் செய்யக்கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 3 நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரும் Realme 9i 5G போன் ரூ.14,999க்கு ஆன்லைன் தளத்தில் வாங்கலாம்.
மோட்டோரோலா ஜி62
ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டைக் கொண்டுள்ள மோட்டோரோலா ஜி62 மற்றொரு 5ஜி பயன்பாடு உள்ள ஸ்மார்ட் போனாகும். சிறந்த பட்ஜெம் போனாகும். 6.55 இன்ச் 120Hz FullHD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 12 5G பேண்டுகளைக் ஆதரிக்கிறது.
இது 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. 2 நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
iQOO Z6 44W
iQOO Z6 44W ஆனது Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 6.44-inch FHD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch 12-இல் இயங்கும் இந்த ஃபோன், 2MP டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் மூலம் ஆதரிக்கப்படும் 50MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. 16MP செல்ஃபி ஷூட்டர் கேமரா கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்ரோரேஜ் போன் ரூ. 14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samsung Galaxy M13 4G/5G
Samsung M13 ஆனது 4G மற்றும் 5G ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஃபோனின் 4G பதிப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட Exynos 850 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 6.6-inch FullHD+ PLS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இது ஆண்ட்ராய்டு 12 அவுட் பாக்ஸை அடிப்படையாகக் கொண்ட One UI கோர் 4 இல் இயங்குகிறது. 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா உள்ளது. அதனுடன் 5எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் கேலக்ஸி எம்13 4ஜி போன் ரூ. ரூ.10,999-ஆகும்.
Samsung M13 5G போன் சில மாறுதல்களுடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வெரியன்ட் போன் ரூ. 13,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.