எப்போதும் டிஜிட்டல் வாட்ச் மீது ஒர் ஈர்ப்பு உண்டு. ஏனெனில் அனைத்து வசதிகளும் அதில் இருக்கும். பி.பி, இதயச் துடிப்பு, ஆக்சிஜன் அளவு எனப் பல வசதிகள் அதில் இருக்கிறது. நம்முடைய போன் உடன் கனெக்ட் செய்வதால் கால், வாட்ஸ்அப் போன்றவற்றையும் அதில் பயன்படுத்தலாம். இதில் குறிப்பாக ஆப்பிள் வாட்ச் பல்வேறு தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஆப்பிள் வாட்ச்சில் உள்ள மருத்துவ அம்சங்கள் பி.பி, இதயச் துடிப்பு, ஆக்சிஜன் அளவு இவைகள் உரிய நேரத்தில் செயல்பட்டு அந்த பயனரின் உயிரைக் காப்பாற்றி உள்ளது என்றும் நாம் செய்திகளில் படித்திருப்போம். அந்தவகையில் ஆப்பிள் வாட்ச் எப்போதும் டிமாண்ட் ஆகவே உள்ளது. இருப்பினும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் வாங்கி விட முடியாது. காரணம் அதன் விலை. விலை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் ஆப்பிள் வாட்ச் போலவே தோற்றம் மற்றம் சில அச்சங்களை ப்டிரான் (Ptron) ஸ்மார்ட்வாட்ச் கொண்டு உள்ளது. Ptron’s Force X12S ஸ்மார்ட்வாட்ச் விலையும் மிகவும் குறைவு. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 போலவே இருக்கும் Ptron’s Force X12S ரூ. 1499 விலையில் கிடைக்கிறது.
Ptron X12S சிறப்பம்சங்கள்
Ptron Force X12S touch வசதியுடன் 1.85-இன்ச் HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆப்பிள் வாட்ச்சின் சில அம்சங்களைப் பெற்றுள்ளது. சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்சாக உள்ளது. வால்பேப்பர், ஆப்பிள் வாட்சைப் போலவே மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச்சில் உள்ள “rotating crown” அம்சம் குறிப்பிடத்தகுந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் straps மாற்றும் அம்சமும் ஆப்பிளில் உள்ளது போல் இருக்கிறது.
ப்ளூடூத் காலிங் வசதி பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்சில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு அம்சமாகும், அது இதில் உள்ளது. அதோடு மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் உள்ளது. மேலும் ஃபிட்னல் வசதிகளைப் பொறுத்தவரை இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு, பி.பி, Sleep monitoring மற்றும் பல வசதிகள் உள்ளன.
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Ptron X12S வாங்கலாம். அமேசானில் ரூ. 1499 விலையில் விற்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/