ரக்‌ஷா பந்தன் அன்று நீங்கள் வாங்கித் தரவேண்டிய அன்புப் பரிசுகள் இதுதான்

டெக்கி ப்ரியர்களான உங்களின் உடன்பிறப்புகளுக்கு தரவேண்டிய டாப் 5 கிஃப்ட்கள்...

Raksha Bandhan  Celebration : இந்தியாவில் அனைத்துமே கொண்டாட்டம் தான். அம்மா, அப்பா, காதல், திருமணம், நட்பு என கொண்டாட்டங்களுக்கு இங்கு தடையே இல்லை. அப்படியாக அமைந்த ஒரு கொண்டாட்டம் தான் ரக்‌ஷாபந்தன். சகோதரத்துவத்தின், உடன்பிறப்பின் மேன்மையினை உணர்த்தும் ஒரு கொண்டாட்டமாக அமைந்திருப்பது ரக்‌ஷாபந்தன்.

எல்லா வருடமும் உங்களுடைய உடன்பிறப்புகளுக்கும், உடன்பிறப்புகள் நெருங்கி பழகுபவர்களுக்கும் நீங்கள் பரிசுகள் வாங்கித் தருவதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் வித்யாசமாக ஏதாவது வாங்கிக் கொடுத்து உங்களின் மகிழ்ச்சியினை உங்களின் உடன்பிறப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரக்‌ஷாபந்தன்  (Raksha Bandhan ) அன்பளிப்புகளாக என்ன தரலாம் ?

ஹானர் பேண்ட் A2 (Honor Band A2)

ஆரோக்கியமான உடல்நிலையை வேண்டி தவம் இருக்கும் உங்களின் உடன்பிறப்புகளுக்கு வாங்கித் தரவேண்டிய மிக முக்கியமான ஒரு பரிசுப் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஹவாய் நிறுவனத்தின் படைப்பான இந்த பேண்டில் இருந்து போன் மற்றும் குறுஞ்செய்தி நோட்டிஃபிகேஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் 0.96 அங்குல OLED திரையில் உங்களின் இதயத்துடிப்பு, மற்றும் இதர ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளலாம். இதனுடைய விலை வெறும் ரூ. 2,499 மட்டுமே.

Raksha Bandhan, Raksha Bandhan Gifts

Honor Band A2

எனெர்ஜி சிஸ்டம் பாக்ஸ் (Energy Sistem Box B2)

உங்களின் உடப்பிறப்பு இசையை மிகவும் விரும்புவார்கள் எனில் அவர்களுக்கு நீங்கள் தேர்வு செய்யும் ரக்‌ஷா பந்தன் பரிசு இந்த சிஸ்டம் பாக்ஸ்ஸாக இருந்தால் நன்றாக இருக்கும்.

மிகவும் அழகான, குறைந்த எடையுடன் இருக்கும் இந்த சிஸ்டம் பாக்ஸில், ப்ளூடூத் மூலமாக உங்கள் திறன்பேசியில் இருக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். இதன் விலை வெறும் ரூ. 1,699 மட்டுமே.

Raksha Bandhan, Raksha Bandhan gifts

எனெர்ஜி பாக்ஸ்

இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சோனி ஹெட்போன் (Sony MDR-XB55AP in-ear headphone)

மறுபடியும் இசைப்பிரியர்களுக்கு பிடித்தமான ஒரு ஹெட்போனை உங்களின் உடன்பிறப்புகளுக்கு வாங்கித்தரலாம். மிகவும் துல்லியமான இசையை கேட்க உதவும் இந்த ஹெட்செட்டின் விலை ரூ. 2080 ஆகும்.

Raksha Bandhan, Raksha Bandhan Gifts

ரக்‌ஷா பந்தன் பரிசுகள்

ஹோம் அட்டோமேட்டிவ் அப்ளையன்சஸ்

கூகுள் ஹோம் மினி அல்லது அமேசான் எக்கோ டாட் போன்ற ஹோம் அட்டோமோட்டிவ் அப்ளையன்ஸை வாங்கித் தரலாம். அது உங்கள் உறவுகளுக்காக இசை இசைக்கும், செய்திகள் வாசிக்கும், அலைபேசி அழைப்புகளை ஏற்கும், குறுஞ்செய்திகளை அனுப்பும் ஷாப்பிங் செய்ய உதவும். இதன் விலை வெறும் 4,099 மட்டுமே.

Raksha Bandhan Gifts, Raksha Bandhan

ரக்‌ஷா பந்தன் பரிசுப் பொருட்கள்,

ஒன்ப்ளஸ் வையர்லெஸ் ஹெட்போன் ( OnePlus Bullets wireless headphone )

ஒன்ப்ளஸ் வையர்லெஸ் ஹெபோன் மீண்டும் ஒரு அழகான பரிசுப் பொருள் இது. மிகவும் அழகாகவும் , மாடர்னாகவும் இருக்கும். மிகவும் துல்லிமான இசையை இரைச்சல் இன்றி கொடுக்கும் இந்த ஹெட்செட்டின் விலை வெறும் 3,990 ஆகும்.

Raksha Bandhan, Raksha Bandhan Gifts

ரக்‌ஷா பந்தன் பரிசுப் பொருட்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close