அக்டோபர் 14-ம் தேதி ஒரு அரிய "வளைய" சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அப்போது நிலவு சூரியனின் நடுப்பகுதியை ஓரளவு மறைத்து "நெருப்பு வளையம்" போல் தோற்றமளிக்கும். இந்த அரிய நிகழ்வு வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே காண முடியும். இந்தியாவில் காண முடியாது. இருப்பினும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பை காணலாம்.
Advertisment
அமெரிக்காவில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கும் போது, நிலவு சூரியனுக்கு முன்னால் கடந்து சென்று, ஒரு வளைய சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது. அக்டோபர் 14-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.35-க்கும் அக்டோபர் 15-ம் தேதி அதிகாலை 2.25 மணிக்கும் இடையில் இந்த நிகழ்வை காண முடியும். அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகளில் பல பகுதிகளில் இந்த நிகழ்வை காண முடியும்.
பூமியில் இருந்து நிலவு வெகு தொலைவில் இருக்கும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. நிலவு வெகு தொலைவில் இருப்பதால், அது சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. சூரியனின் நடுப்பகுதியை மட்டுமே மறைக்க முடியும். இது நெருப்பு வளையத்தை உருவாக்குகிறது.
எப்படி பார்க்க வேண்டும்?
மற்ற கிரகணங்களைப் போலவே, வளைய கிரகணத்தையும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது, அது பாதுகாப்பானது அல்ல. பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும்.
நாசா நேரடி ஒளிபரப்பு
இந்தியாவில் இந்த அரிய நிகழ்வை காண முடியாது என்றாலும், நாசாவின் நாசா நேரடி ஒளிபரப்பு மூலம் இந்த நிகழ்வை வீட்டில் இருந்தபடியே காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“