ரியல்மிநார்சோ 60 ப்ரோ,நார்சோ 60 ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் நேந்று (ஜூலை 7) அறிமுகப்படுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு ரியல் மி நார்ஜோ சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இது அதிகபட்ச செயல்திறனை வழங்கும் Gen Z-ஐ வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நார்சோ 60 ப்ரோ
ஆரஞ்சு நிறத்தில் வரும் நார்சோ 60 ப்ரோ வேகன் லெதர் பேக்கைக் கொண்டுள்ளது. அதனால் பிரீமியம் லுக் கொண்டுள்ளது. கேமரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 11 சீரிஸ் போலவே உள்ளது.
Mediatek Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த போன் 6.7 இன்ச் க்ர்வுடு AMOLED திரையுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட முதல் மிட்- ரேஞ் ஸ்மார்ட் போன் ஆகும்.
12ஜிபி ரேம் மற்றும் 100 எம்.பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 60
ரியல்மி நார்சோ 60 பட்ஜெட் விலை 5ஜி போனாகும். இது வளைந்த (curved) பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இது Mediatek Dimensity 6020 சிப்செட் மற்றும் 6.43-inch 90Hz AMOLED திரையை கொண்டுள்ளது.
64MP கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது. ப்ரோ வேரியண்ட்டைப் போலவே, நீங்கள் 5,000 mAh பேட்டரியைப் பெறுவீர்கள், ஆனால் சார்ஜிங் 33W வரை மட்டுமே உள்ளது.
ரியல்மி நார்சோ 60 ப்ரோ, நார்சோ 60 விலை
ரியல்மி நார்சோ 60 ப்ரோ, நார்சோ 60 இரண்டும் ஜூலை 15 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் நர்சோ 60 அடிப்படை விலை ரூ. 17,999 ஆகும். 256 ஜிபி வெர்ஷன் போன் ரூ. 19,999 க்கு வாங்கலாம்.
Narzo 60 Pro மூன்று வகைகளில் கிடைக்கிறது - 8GB+128GB, 12GB+256GB, மற்றும் 12GB+1TB வேரியண்டில் கிடைக்கிறது. இது முறையே ரூ.23,999, ரூ.26,999 மற்றும் ரூ.29,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் நிறுவனம் அறிமுக சலுகையாக ரூ.1,500 விலையிலும் மற்றும் கூடுதலாக 6 மாத வாரண்டியையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.