சூப்பர் ஆஃபர்.. விலை ரூ.10,000-க்கும் கீழ்; Redmi 12C பட்ஜெட் போன் அறிமுகம்

இன்று அறிமுகம் செய்யப்படும் Redmi 12C ஸ்மார்ட்போன் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Redmi 12C
Redmi 12C

சாம்சங், ரெட்மீ, ரியல் மீ, ஜியாமி, மோட்டோரோலா போன்றவைகள் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களாக உள்ளன. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஜியாமி தனது பட்ஜெட் போனை இன்று (மார்ச் 30) அறிமுகம் செய்கிறது. Redmi 12C ஸ்மார்ட்போன் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.10,000க்கும் குறைவான விலையில் உள்ள இந்த போன் இன்று முதல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

Redmi 12C ஆனது 6.7-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், QVGA டெப்த் சென்சார் மூலம் 4-in-1 பிக்சல் பின்னிங்கிற்கான ஆதரவுடன் 50MP முதன்மை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் Redmi 12C HDR மற்றும் நைட் மோட் வசதி கொண்டுள்ளது. fingerprint அன்லாக் வசதி, முன்புறத்தில் teardrop நாட்ச் 5MP செல்ஃபி ஷூட்டர் வசதி ஆகியவை உள்ளது.

6ஜிபி ரேம் வெர்ஷன் வரை கிடைக்கிறது. ரெட்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, போன் 128GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இருப்பினும், 1TB வரையிலான கார்டுகளை ஆதரிக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் இன்டர்னல் ஸ்டோரேஜை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

Redmi 12C ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்குகிறது. 5,000mAh மற்றும் 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தற்போது இந்த போன் 4 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Grey, Blue, Green and Purple நிறங்களில் கிடைக்கிறது. Note 12i, Motorola G13 போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Redmi 12c to cost less than rs 10000 check specs and other details

Exit mobile version