/tamil-ie/media/media_files/uploads/2022/10/iQOO-Z6-review-1.jpg)
இந்தியாவில் 5ஜி சேவை அக்டோபர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனம் சில மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முதல்கட்டமாக இவ்விரண்டு நிறுவனங்களும்
5ஜி சேவையை சில நகரங்களில் வழங்கி வருகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் சேவை விரிவுபடுத்தப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலரும் 5ஜி போன் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்போம். அந்தவகையில் உங்கள் பட்ஜெட்-க்கு ஏற்ப முன்னணி நிறுவன 5ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன. ரூ.15,000க்குள் நல்ல தரத்துடன் கேமரா, பேட்டரி போன்ற பல சிறப்பம்சங்களுடன் 6 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
iQOO Z6
iQOO Z6 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த விலையில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் iQOO Z6 போனும் ஒன்று. iQOO Z6, Snapdragon 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6.58 இன்ச் 120Hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12, Funtouch OS 12 அடிப்படையில் இயங்குகிறது. 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வரை வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்
டிரிபிள் கேமரா வசதி
50MP பிரைமரி லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டது.
5,000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
பட்ஜெட் விலையில் 4GB வேரியன்ட் போன், ரூ.14,999 விலையில் சார்ஜர் இல்லாமல் வாங்கலாம்.
Redmi Note 10T
ரெட்மி நோட் 10T பட்டியலில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. 6.5-இன்ச் 90Hz IPS LCD டிஸ்ப்ளே, 500 nits peak brightness வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 11 இன் அடிப்படையில் MIUI 12 உடன் வருகிறது. 6GB ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
சிறப்பம்சங்கள்
டிரிபிள் கேமரா போன்
48MP பிரைமரி லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டது.
5,000mAh பேட்டரி
4GB ரேம், 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடம் அமேசானில் Redmi Note 10T ரூ.14,999க்கு பெறலாம்.
Samsung Galaxy F23
இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்சி F23 Snapdragon 750G சிப்செட் மற்றும் 6.6 இன்ச் 120Hz TFT LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான One UI 4.1 இல் இயங்கும். 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. Samsung Galaxy F23 பட்ஜெட் விலையில் சிறந்த 5ஜி போனாகும்.
சிறப்பம்சங்கள்
50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா
5,000mAh பேட்டரி உள்ளது. 25W சார்ஜிங் ஆதரிக்கும்.
பிளிப்கார்ட்டில் ரூ.14,399க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Motorola Moto G51
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. மோட்டோ ஜி51 Snapdragon 480 Plus சிப்செட் மூலம் இயங்குகிறது. 6.8 இன்ச் 120 Hz IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டுள்ளது
50MP,8MP,2MP கேமரா வசதி
5,000mAh பேட்டரி, 20W சார்ஜிங்
4GB/64GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.12,249 ஆன்லையில் விற்பனையில் உள்ளது.
Realme 9i 5G
ரியல்மி 9i 5G சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6.6 இன்ச் 90Hz IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான Realme UI 3.0 இல் இயங்குகிறது.
சிறப்பம்சங்கள்
பின்புறத்தில், 2MP மேக்ரோ கேமரா, மற்றொரு 2MP கேமரா மற்றும் 50MP சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா போன் ஆகும். 5,000mAh பேட்டரி, 18W சார்ஜிங் கொண்டது. Realme 9i 5G ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Samsung Galaxy M13
சாம்சங்கில் மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போன். Galaxy M13, 4GB/64GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. MediaTek Dimensity 700 சிப்செட், 6.5-இன்ச் 90Hz PLS LCD டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு 12 அவுட் பாக்ஸ் அடிப்படையில் One UI Core 4 இல் இயங்குகிறது.
சிறப்பம்சங்கள்
50MP பிரைமரி லென்ஸ், 2MP டெப்த் சென்சார் வசதி உள்ளது.
டூயல் கேமரா போன்
முன்பக்கத்தில் 5MP செஃல்பி கேமரா உள்ளது.
5,000mAh பேட்டரி, 15W சார்ஜிங் கொண்டது.
இத்தனை வசதிகள் கொண்ட 4GB/64GB ஸ்டோரேஜ் போன் ரூ.13,999க்கு பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.