இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்கள் மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விலை, அதிக வசதி, பயனர்கள் பயன்படுத்த வசதியாக இருப்பதால் ஆண்ட்ராய்டு போன்கள் பலரையும் கவர்ந்துள்ளது. பட்ஜெட் விலை, அதிக விலை என தேவைக்கு ஏற்ப போன்களை வாங்கி கொள்ளலாம். ஸ்மார்ட்போன்கள் எனும் ஆண்ட்ராய்டு போன்கள் பல முன்னணி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. சாம்சங், ரெட்மி, ஓபோ போன்றவைகள் போட்டி நிறுவனங்களாக உள்ளன.
இந்நிலையில், ரெட்மி தனது நோட் 12 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இந்நிறுவனம் சீனாவில் தனது நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ஜனவரி 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. ரெட்மியின் நோட் 11 சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Note 12 சீரிஸின் கீழ், Xiaomi 3 போன்களை அறிமுகப்படுத்துகிறது. Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus. இருப்பினும், இந்தியாவில் Xiaomi புரோ மாடல் போன்களை மட்டுமே அறிமுகப்படுத்தும்.
Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus
நோட் 12 ப்ரோ பிளஸ் 200 மெகாபிக்சல் ப்ரைமிரி கேமராவுடன் வருகிறது. இந்தியாவில் இந்த கேமரா வசதியுடன் வரும் இரண்டாவது போன் இதுவாகும். முன்னதாக, மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 200-மெகாபிக்சல் கேமரா வசதியுடன் அறிமுகமானது.
Redmi Note 12 Pro+ ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240Hz தொடு திரை வசதியுடன் 6.67-இன்ச் முழு-HD OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Note 12 Pro+ ஆனது MediaTek Dimensity 1080 SoC மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் வசதி உள்ளது.
பேக் கேமரா, 200-மெகாபிக்சல் OIS சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி பயன்படுத்த 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil