ரிலையன்ஸ் ஜியோ: பழைய ப்ளானுக்கு ‘பை‘.... இன்று முதல் புதிய டேரிஃப்!

ரிலையன்ஸ் ஜியோ தனது டேரிஃப்-களில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தனது டேரிஃப்-களில் புதிய மாற்றத்தை கொண்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த டேரிஃப்கள் முந்தைய டேரிஃகளை விட கொஞ்சம் காஸ்ட்லியாக தான் தெரியுது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது 5 டேரிஃப் பிளான்களை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ரூ.309 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா வீதம் 30 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.409 ப்ளானில் 20 ஜி.பி வழங்கப்படும் நிலையில், தினந்தோறும் பயன்படுத்படுத்தும் லிமிட் ஏதும் இந்த ப்ளானில் இல்லை. ரூ.509 ப்ளானில் நாள்தோறும் 2 ஜி.பி வீதம், 60 ஜி.பி என ஒரு மாத வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.

ரூ.799 ப்ளானில் நாள்தோறும் 3 ஜி.பி வீதம் 90 ஜி.பி ஒருமாத வேலிடிட்டியில் உள்ளது. ரூ.999 ப்ளானில் ஒரு மாத காலத்திற்கு 60 ஜி.பி வழங்கப்படுகிறது. இதில் தினமும் பயன்படுத்தும் லிமிட் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் புதிய டேரிஃப் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.459 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி வீதம் 84 ஜி.பி 84 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. அதிகம் டேட்டா பயன்படுத்தும் பயனர்கள் ரூ.509 ப்ளானை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ப்ளானில் தினந்தோறும் 2 .ஜி.பி விதம் 98 ஜி.பி 49 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல, ரூ399 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி வீதம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 1 ஜி.பி லிமிட் முடிந்தவுடன் வேகமானது 64 கே.பி என்ற வீதத்தில் பயன்படுத்தலாம். ரூ.999 ப்ளானில் 60 ஜி.பி 90 நாட்கள் வேலிடிட்டியிலும், ரூ.1999 ப்ளானில் 125 ஜி.பி டேட்டா 180 நாட்கள் வேலிடிட்டியிலும் வழங்கப்படுகிறது. இந்த ப்ளான்களில் டெய்லி லிமிட் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close