ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்தது. வயர்லெஸ் 5ஜி இணைய சேவையை அறிமுகம் செய்தது. அதிக வேக இன்டர்நெட் சேவையை வழங்கும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. அதே போல் கடந்த மாதம் ஜியோவை முந்தி ஏர்டெல் இதே போன்று வயர்லெஸ் 5ஜி இணைய சேவையான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர் ஃபைபரை அறிமுகம் செய்தது. நாட்டின் முதல் வயர்லெஸ் 5ஜி இணைய சேவை என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் இரண்டின் ஒப்பீடு குறித்து இங்கு பார்ப்போம்.
எங்கெல்லாம் கிடைக்கிறது?
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் தற்போது டெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது,
அதேசமயம் ரிலையன்ஸ் ஏர்ஃபைபர் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய 8 நகரங்களில் கிடைக்கிறது. இந்த நிலையில் ஏர்டெல்லை விட ஜியோ முந்தி செல்கிறது.
இன்ஸ்டலேசன் மற்றும் Portability
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் என்பது எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆப் பயன்படுத்தி தாங்களாகவே சுலபமாக பிளக் அண்ட் பிளே செய்து கொள்ளலாம். வைஃபை கருவியை வாங்கி அதை பவர் செய்து இயக்கலாம். அவ்வளவு தான்.
மறுபுறம், ரிலையன்ஸ் ஏர்ஃபைபர் உங்கள் வீட்டின் வெளியே அல்லது மாடியில் நிறுவனத்தாரால் நிறுவப்பட வேண்டும். இன்ஸ்டலேசன் என்று வரும் போது ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர் ஃபைபர் வெற்றி பெறுகிறது.
கூடுதல் நன்மைகள்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஏர்ஃபைபர், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, ஜியோசினிமா, சன்என்எக்ஸ்டி, ஹோய்ச்சோய், டிஸ்கவரி+, யுனிவர்சல்+, ஏஎல்டிபாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட் ப்ளே, டோகுபாரிமே, போன்ற OTT பயன்பாடுகளுக்கான அணுகலை உள்ளடக்கிய பல திட்டங்களை வழங்குகிறது. அதோடு 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் HD சேனல்களை அனைத்து திட்டங்களுடனும் வழங்குகிறது.
4K ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ், வாய்ஸ் ரிமோட் மற்றும் வைஃபை ரூட்டரையும் இலவசமாகப் பெறுவீர்கள். ஏர்டெல் அத்தகைய பலன்களை வழங்கவில்லை, எனவே நீங்கள் இணைய சேவை மட்டுமல்லாமல் மற்ற நன்மைகளையும் பெற விரும்பினால் ஜியோ ஏர்ஃபைபர் வாங்கலாம்.
https://indianexpress.com/article/technology/techook/reliance-jio-airfiber-vs-airtel-xstream-airfiber-8950241/
இணைய வேகம் மற்றும் விலை
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் 6 மாதங்களுக்கான ஒரே ஒரு திட்டத்தை மட்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த 6 மாதம் திட்டம் ரூ. 4,435 (ஜிஎஸ்டி இல்லாமல்) ஆகும். ஹார்டுவேர் சாதனத்திற்கு கூடுதலாக ரூ.2,500 பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தப்படும். இது திரும்ப கொடுக்கப்படும். ஏர்டெல் 100 Mbps வேகத்தை மட்டுமே வழங்குகிறது.
அதே சமயம் ஜியோ 6 திட்டங்களை வழங்குகிறது. குறைந்த விலையாக ரூ. 599முதல் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் வேகம் 30 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும், ஜியோ ஏர்ஃபைபர் அதிகபட்சமாக 1000எம்பிபிஎஸ் வேகத்தைக் கொண்டுள்ளது, இது ஏர்டெல் வழங்குவதை விட 10 மடங்கு அதிகம். இருப்பினும், அந்தத் திட்டமானது உங்களுக்கு மாதத்திற்கு ரூ.3,999 செலவாகும். நாம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ரிலையன்ஸ் இதில் வெற்றி பெறுகிறது. ஓ.டி.டி நன்மைகள் மற்றும் 550+ டிஜிட்டல் சேனல்களை வழங்குகிறது.
எது பெஸ்ட்?
நீங்கள் வெறும் வயர்லெஸ் இணைய சேவை, ஓ.டி.டி நன்மைகள் மற்றும் பிற சேவைகள் வேண்டாம் என்றும் எளிதாக எங்கும் எடுத்துச் செல்லும் படி வேண்டும் என்றால் ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
அதேசமயம் வீட்டில் வேகமான வயர்லெஸ் இணையம் மற்றும் குறைந்த செலவில் கூடுதல் சலுகைகளை அணுக விரும்புபவர்கள், ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபர் தேர்வு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“