ரிலையன்ஸ் ஜியோ ”டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர்’‘... ரூ.399-க்கு ரீசார்ச் செய்தால் ரூ.2599 கேஷ்பேக் கிடைக்குமா?

ரிலையன்ஸ் ஜியோ டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர் மூலம் ரூ.2599-க்கான பலன்களை பெற முடியுமா?

ரிலையன்ஸ் ஜியோ டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர் மூலம் ரூ.2599-க்கான பலன்களை பெற முடியுமா?

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio, Smartphones, Jio cashback offer, Rs 399 recharge,

ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு டிரிபிள் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.399 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு ரீசார்ச் செய்யும்போது ரூ.2599 மதிப்பிற்கான பலன்களை பெற முடியும் என தெரிவித்திருக்கிறது.

Advertisment

ஆனால், ரூ.2599 கேஷ்பேக் என்பதை பெற முடியுமா? என்று கேட்டால், அதற்கு ஆம் என்று கூறுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அது குறித்து கொஞ்சம் விவரத்தை தெரிந்து கொள்ளுவோம் வாருங்கள்.

ஜியோ அறிவித்துள்ள இந்த டிரிபிள் கேஷ்பேக் ஆஃபரானது நவம்பம் 10 முதல் நவம்பர் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு பொருந்தும். குறிப்பிடும்படியாக இந்த ஆஃபர் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.399 அல்லது அதற்கு மேலான தொகையில் ரீசார்ச் செய்யும்போது, வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக், அதாவது, ரூ400 மதிப்பிலான வவுச்சர் கிடைக்கப்பெறும். ரூ.399-க்கு ரீசார்ச் செய்யும் போது ரூ.50 மதிப்பிலான 8 வவுச்சர்கள் கிடைக்கும். மைஜியோ ஆப்-ல் இந்த வவுச்சர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த வவுச்சர்களை நவம்பவர் 15-ம் தேதிக்கு பின்னர் தான் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜியோ அதன் விதிமுறைகளில் தெரிவிக்கிறது. மேலும், மைஜியோ ஆப் மூலமாக ரிசார்ச் செய்தவர்களுக்கே இந்த வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. ஒருவேளை பேடிஎம் மூலமாக ரீசார்ச் செய்யும்பட்சத்தில் இந்த வவுச்சர்களை பயன்படுத்த முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

Advertisment
Advertisements

அமேசான்பே, ஆக்ஸிஸ்பே, ஃபிரீசார்ச்,மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே போன்றவற்றின் வாயிலாக ரீசார்ச் செய்யும்போது, இன்ஸ்டன்ட் கேஷ்பேக் என்ற முறையில் ரூ.300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 கேஷ்கேக் வழங்கும் மொபிக்விக், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 கேஷ்பேக் வழங்குகிறது. அமேசான்பே மூலமாக முதன்முதலாக ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 மட்டுமே கேஷ்பேக் உள்ளது. இதேபோல, பேடிஎம் மூலம் முதன்முறையாக ரீசார்ச் செய்பவர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படும் நிலையில், அதற்காக ஸ்பெஷல் கோடு பயன்படுத்த வேண்டும். ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 கேஷ்பேக் உள்ளது.

போன்பே தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 கேஷ்பேக் வழங்குகிறது. ஆக்ஸிஸ்பே தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 கேஷ்பேக் வழங்குகிறது. ப்ரீசார்ச் ரூ.50 கேஷ்பேக் வழங்குகிறது.

ரூ.2,599 கேஷ்பேக் உண்மையாகவே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா?

வவுச்சர்கள் மூலமாக மட்டுமே இதனை பெறமுடியும் என்பது கவனிக்கத்தக்கது. ஏஜியோ, யாத்ரா.காம் மற்றும் ரிலையன்ஸ்டிரெண்ட்ஸ்.காம் போன்றவற்றில் பணம் செலவு செய்து பர்சேஸ் செய்ய வேண்டும். அதற்கு டிஸ்கவுண் என்ற முறையில் ஜியோ வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜியோ.காம்-ல் குறைந்தபட்சமாக ரூ.1500-க்கு பர்சேஸ் செய்யும் போது அதற்கு ரூ.399 டிஸ்கவுண்ட் கிடைக்கப்பெறும். யாத்ரா.காம் மூலமாக ரவுண்ட் ட்ரிப் விமான டிக்கெட்(டொமஸ்டிக்) புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்குமாம். ஒன்-வே விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இறுதியாக, ரிலையன்ஸ்டிரெண்ட்ஸ்.காம்-ல் ரூ.500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற வேண்டுமானால் குறைந்தபட்ச தொகையாக ரூ.1999-க்கு பர்சேஸ் செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த கேஷ்பேக் வவுச்சர்கள் உடனடியாக கிடைக்கப்பெறாது என்றும், நவம்பர் 20-ம் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reliance Jio

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: