ரிலையன்ஸ் ஜியோ “டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர்”… பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2599 வரை கேஷ்பேக்!

ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபரை ( ரூ.2599 ) அறிவித்துள்ளது.

By: Updated: November 9, 2017, 05:16:01 PM

ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2599 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக ஜியோ தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.399 அல்லது அதற்கு மேலான தொகையில் ரீசார்ச் செய்யும்பாது, ரூ.400 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அமேசான்பே, ஆக்ஸிக்பே, ஃப்ரிரீசார்ச், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே போன்ற ஈ-வேலட் மூலம் ரீசார்ச் செய்யும்போது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈ-காமர்ஸ் தளங்ளான ஏஜியோ, யாத்ரா.காம் மற்றும் ரிலையன்ஸ்டிரென்ட்ஸ்.காம் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்ச தொகையாக ரூ.1500-க்கு ஏஜியோ.காம் தளத்தில் பர்சேஸ் செய்யும் போது, ரூ.399-க்கான வவுச்சரை பயன்படுத்திக் கொள்ளமுடியுமாம். யாத்ரா.காம் மூலமாக ரவுண்ட் டிரிப் விமான டிக்கெட் புக்(டொமஸ்டிக்) செய்பவர்களுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுமாம். இதேபோல, ரிலையன்ஸ்டிரெண்ட்ஸ்.காம் மூலமாக ரூ.1999 அல்லது அதற்கு மேல் பர்சேஸ் செய்யும் போது ரூ.500 டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.

ரூ.400 (Rs 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15-ம் தேதி முதல் மைஜியோ-ல் கிடைக்கப்பெறும் என்றும், மற்ற வேலட்களில் அதற்கான கேஷ்பேக் உடனடியாக கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ-காமெர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Reliance jio introduces triple cash back offer for jio prime members

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X