அன்லிமிடெட் இலவச கால்ஸ் என அறிவித்திருந்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது ஒருநாளைக்கு 300 கால்ஸ் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தவறான முறையில் இந்த கால்ஸை பயன்படுத்துவதை தடுப்பதற்காக இந்த நடிவடிக்கையை ஜியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் இலவசம் என ஜியோ அறிவித்திருந்ததை வவுச்சர்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்கள் கண்டிருக்க முடியம். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் 300 கால்கள் மட்டுமே இலவசமாக பெற முடியுமாம்.
ஜியோ ரிசார்ஜ்க்கு அந்நிறுவனத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த இந்த பிளான் வழங்கப்படுகிறது. அங்கீரம் செய்யப்படாத டெரிமார்க்கெட்டிங், தவறாக பயன்படுத்துதல், வர்த்தக நோக்கில் பயன்படுத்தினால் இணைப்பு துண்டிக்கப்படும். இதேபோல, டிராய் விதிமுறைகளின்படி நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும். கமெர்ஷியல் பிளானை பொறுத்தவரையில் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு 1200 நிமிடங்கள் அல்லது மாதத்திற்கு 3,000 நிமிடங்கள்(28 நாட்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் எது முன்னதாக வருகிறதோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமாம்
இதேபோல, 4ஜி ஹேன்ட்செட்க்கான ஏர்டெல் பிளான்களில், ரூ.149, ரூ.244, ரூ.349 மற்றும் ரூ.399 என்ற தொகையில், டேட்டாவுடன் கூடிய இலவச அழைப்புகள் என்ற பிளான்ஸ் உள்ளன. அந்த பிளான்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் என்றும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் அதிகபட்சமாக பயன்படுத்திக் கெள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அன்லிமிடெட் கால்ஸ் என்ற போதிலும் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களுக்கு மேல் இலசவ அழைப்புகளை பெற முடியாது என்பது கவனிக்கத்தக்கது. இதன்பின்னர், மெயின் பேலன்ஸில் இருந்து தொகை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் நிறுவனமும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா என்ற பிளான்ஸை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எனினும், வோடபோன் நிறுவனத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்கள் 7 நாட்களுக்குள்ளாக 1000 நிமிடத்திற்கும் அதிகமான கால்ஸை பயன்படுத்தும் பட்சத்தில், நிமிடத்திற்கு 30 பைசா என்ற கட்டணம் அந்த 7 நாட்கள் காலவரையறைக்குள் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளிலேயே 1000 கால்ஸை பயன்படுத்திவிட்டால், அடுத்த 5 நாட்களுக்கு 30 பைசா கட்டணத்திலேயே கால்ஸை பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல, நாள் ஒன்றுக்கு 250 கால்ஸை பயன்படுத்திவிட்டால், அடுத்து வரும் ஒவ்வொரு நிமிடத்திற்க 30 பைசா கட்டணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.