குடியரசு தினத்தையொட்டி ஜியோவின் அடுத்த அதிரடி!

ஜியோ நிறுவனம், குடியரசு தின ஆஃபராக, 1ஜிபி டேட்டா வழங்கி வந்த ஜியோவின் ரூ. 349, ரூ.399, ரூ.449 திட்டங்களில் இனி 1.5 ஜிபி...

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், குடியரசு தின ஆஃபராக, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர். ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு, புதிய ரீசார்ஜ் திட்டங்கள், அதிக டேட்டா வசதி, கேஸ்பேக் ஆஃபர் போன்ற திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், குடியரசு தின ஆஃபராக நாள் ஒன்றுக்கு 1ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வரும் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜியோவின் ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில், ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம், 42 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஜியோவின் இந்த ரூ. 149 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.198 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு இதுவரை, 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், மொத்தம் 56 ஜிபி டேட்டா வழக்கப்படுகின்றன.

குடியரசு தின ஆஃபராக, 1ஜிபி டேட்டா வழங்கி வந்த ஜியோவின் ரூ. 349, ரூ.399, ரூ.449 திட்டங்களில் இனி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கி வந்த ரூ.398, ரூ.448,ரூ.498 திட்டங்களில் இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக டேட்டா ஆஃபரில் புதிய மாற்றங்களை அறிவித்திருந்த நிலையில், ஜியோவும் தற்போது டேட்டாவில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.

×Close
×Close