ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. பல்வேறு நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. 28 நாட்கள், 56, 84 நாட்கள் எனப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இவைகள் பெரும்பாலும் அன்லிமிடெட் காலிங் வசதியுடைய ரீசார்ஜ் திட்டங்களாக உள்ளன.
இந்நிலையில் இதற்கு ஒரு படி மேலாக 11 மாதங்கள் வேலிடிட்டி உள்ள வகையில் அசத்தல் ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. அதாவது ரூ.895 மட்டுமே ஆகும். ஆனால் இதில் டேட்டா சேவை வசதியை முழுமையாக பெற முடியாது.
ரூ.895 திட்டம்
ஜியோவின் ரூ.895 திட்டமானது 11 மாதங்கள் அதாவது 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் இலவச காலிங் வசதியைப் பெறலாம். உள்ளூர், வெளியூர் அழைப்புகள், வேறு நெட்வொர்க் காலிங் என அனைத்தும் இலவசமாக பெறலாம். ஆனால் இதில் டேட்டா சேவை வசதியை முழுமையாக பெற முடியாது.
28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்.எம்.எஸ் வசதிகளை இலவசமாகப் பெறலாம்.
இந்த திட்டத்தின் 2ஜிபி டேட்டா வேலிடிட்டி முடிந்ததும், உங்கள் டேட்டா வேகம் 64 கே.பி.பி.எஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். இன்டர்நெட் டேட்டாவுக்கு வைஃபை பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“