ஜியோ போனுக்கு அப்ளை செய்வது எப்படி?

புதிய பயனர்கள் இந்த பக்கத்திற்கு சென்று பெயர், ஈமெயில், மொபைல் நம்பர் Add to dictionary குறிப்பிட்டு அதில் பதிவு செய்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ போன் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஜியோ போனை அறிமுகம் செய்யது. இந்த போன் முற்றிலும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டது. முதலில் பாதுகாப்பு தொகையாக ரூ.1500 செலுத்த வேண்டும் என்ற போதிலும், அந்த தொகை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் இந்த ஜியோ போனுக்கான முன்பதிவு தொடங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ ஏற்னெனவே அறிவித்துள்ளது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பதன் அடிப்படையில் இந்த ஜியோ போன் விற்பனைக்கு வரவுள்ளது என்பதால், முன்னதாக யார் யார் முன்பதிவு செய்தார்கள் இந்த போனை சீக்கிரமாக பெற முடியும்.

இந்த நிலையில், ஜியோ நிறுவனத்தின் இணைதளத்தில் “Keep Me Posted” என்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயனர்கள் இந்த பக்கத்திற்கு சென்று பெயர், ஈமெயில், மொபைல் நம்பர் ஆகியவற்றை குறிப்பிட்டு அதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவற்றை செய்த பின்னர் பதிவுசெய்த ஈமெயிலுக்கு செய்தியும் மற்றும் மொபைல் நம்பருக்கு, ஜியோ-வில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உங்களது விருப்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் பதிவு செய்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஜியோஃபோனில் ரூ.153 என்ற விலையில் மாதம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாதாந்திர ப்ளான் மட்டுமல்லாமல் வாராந்திர ப்ளான் மற்றும் 2 நாட்களுக்கான ப்ளானும் உள்ளன. அதன்படி, ரூ.54-க்கு வாராந்திர ப்ளானும், ரூ.24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் உள்ளன.

ஜியோ போனில் 2.4 இன்ச் QVGA டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 205 ப்ராசஸர், டார்ச் லைட், ஆல்ஃபாநியூமரிக் கீபேடு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், 24 மொழிகள் அடங்கிய இந்த போனாது, வாய்ஸ் காமெண்ட்-க்கு பதில் அளிக்கக் கூடியது. முன்பதிவு முடிந்த பின்னர் போனை விற்பனைக்கு கொண்டு வர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி , செம்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜியோ போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டில் மட்டும் சுமார் 10 கோடி போன்களை தயாரிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.

×Close
×Close