ஜியோபோன்: இது சும்மா டிரையல் தான்… ஆகஸ்ட்-24 முதல் முன்பதிவு தொடக்கம்!

ஆகஸ்ட் 24-ம் தேதி ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15 முதல் ஜியோபோனின் பீட்டா சோதனை தொடங்குகிறது.

reliance-jiophone

ரிலையன்ஸ் அறிவித்துள்ள ஜியோபோனுக்கு மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமானது ஆகஸ்ட் 15 முதல் ஜியோபோனின் பீட்டா சோதனையை தொடங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்த முறையில், பிட்டா சோதனை பயனர்களை தேர்வு செய்கிறது என்பது குறித்து தெரியவில்லை என்ற போதிலும், ஆகஸ்ட் 15 முதல் முதல் ஜியோபோன் சோதனைக்கு வருகிறது. ஆனாலும், ஆகஸ்ட் 24-ம் தேதி முதலே ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

jiophone

இலவசமான போன் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு, முன்பதிவுக்கு எராளமானோர் போட்டியிடுவர் என்பது தெரிகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த போனை விற்பனை செய்ய ரிலையஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, முன்பதிவு தொடங்கும், அந்த சமயத்திலேயே ஜியோபோனை முன்பதிவு செய்தால் மட்டுமே அதனை விரைவில் பெற முடியும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் புக் செய்வது எப்படி ?

இணையதளத்தை பயன்படுத்தத் தெரிந்திருந்தால், ஆன்லைன் மூலமாக ஜியோபோனை முன்பதிவு செய்வது எளிதானது. Jio.com என்ற இணையதளத்திற்கு சென்று ‘Keep Me Posted’ என்பதை தேர்வு செய்யவும். பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்களது பெயர், ஈமெயில் ஐடி, போன் நம்பர், பின்கோடு ஆகியவற்றை அதில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த விவரங்களை பதிவு செய்த பின்னர், ஜியோபோன் குறித்த தகவல்கள் மற்றும் அப்டேட்ஸ் உங்களுக்கு ஈமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படும்.

Reliance Jio

ஒருவேளை இணையதளத்தை பயன்படுத்தத் தெரியாது என்றால், அதற்கும் வசதி உள்ளது. ஜியோபோன் வாங்க விரும்பும் நபர்கள் அருகில் உள்ள ஜியோ ஸ்டோருக்குச் சென்று தங்களது விருப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆஃப்லைன் மூலமாக வாங்க விருப்புபவர்கள் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக வாங்க இயலாது.

ஜியோபோன் விலை

ரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், பாதுபாப்பு தொகையாக முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது திரும்ப பெறக்கூடியது என்றும், 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த தொகை திருப்பக் கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பணத்தை திரும்பப்பெற வேண்டுமானால், பயன்படுத்திய ஜியோபோனை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

jio2

ரூ.153 என்ற விலையில் மாதாந்திர ப்ளான் அறிமும் செய்யப்பட்டது. அந்த ப்ளான்டி தினமும் 500 எம்.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படும். இதேபோன்று வாராந்திர ப்ளான் மற்றும் இரண்டு நாட்களுக்கான ப்ளான் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். ரூ.54-க்கு வாராந்தி ப்ளானும், ரூ. 24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ப்ளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

ஜியோபோன் சிறப்பம்சங்கள்

ஜியோபோன் இரண்டு மாடல்களில் வெளிவரவுள்ளது. ஸ்னாப்டிராகன் 205 ப்ராசஸர் கொண்ட மாடல் மற்றும் ஸ்ப்ரெட்ரம் சிப்செட் கொண்ட மற்றொரு மாடல் ஆகும்.

  • 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
  • டார்ச் லைட், ஜியோ ஆப்ஸ், ஆல்ஃபாமெட்ரிக் கீபேட்
  • 24 பிராந்திய மொழிகள் சப்போர்ட் செய்யக்கூடியது.
  • வாய்ஸ் கமென்ட்ஸ்க்கு பதில் அளிக்கக்கூடியது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jiophone bookings on august 24 heres how to book the 4g feature phone

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express