ரிலையன்ஸ் ஜியோ போன் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது

இந்த 4G VoLTE கைபேசியின் விலை வெறும் ரூ 1,500 மட்டுமே. முன் பதிவு செய்பவர்கள் ரூ 500 செலுத்தி முன்பதிவு செய்யலாம். மீதம் விநியோகத்தின்...

ஜியோ போன் விற்பனை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தது. தற்பொழுது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 4G VoLTE கைபேசியை வாங்குவதற்கான இணைப்பை குறுஞ்செய்திகளாக அனுப்புகின்றனர்.

அந்த இணைப்பில் உள்ள குறியீட்டை காட்டி அருகில் இருக்கும் ஜியோ கடையில் இந்த கைபேசியை வாங்கலாம்.
சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த ஜியோ போன் 6 மில்லயன் கைபேசிகளை விற்றது. அதை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக மீண்டும் விற்பனையை தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் 10 மில்லயன் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, ஜியோ போனை ஜூலையில் அறிமுகப்படுத்தினார். அடுத்த மாதமே இதற்கான முன் பதிவும் தொடங்கியது, ஆனால் அதிக பதிவுகள் வந்ததால் அக்டோபர் 19 தான் விநியோகப்படுத்தப்பட்டது.

4G VoLTEஜியோ போனின் குறிப்பு

இந்த 4G VoLTE கைபேசியின் விலை வெறும் ரூ 1,500 மட்டுமே. முன் பதிவு செய்பவர்கள் ரூ 500 செலுத்தி முன்பதிவு செய்யலாம். மீதம் விநியோகத்தின் போது பெறப்படும். மேலும் இந்த கைபேசியை மூன்று ஆண்டுக்குள் வேண்டாம் என திருப்பி கொடுப்பவர்கள் கைபேசியின் முழு பணத்தையும் பெறலாம்.

இது 2.4 அங்குல QVGA டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இதில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் மைக்ரோ எஸ்டி, FM வானொலி, சுடரொளி உள்ளது. மேலும் ஜியோவின் அனைத்து ஆப் களையும் இதில் பயன்படுத்தலாம். 2 மெகா பிக்சல் பின் பக்க கேமராவும் 0.3 முன் பக்க கேமராவும் உள்ளது. SPRD 9820A/QC8905 செயலி, 512எம்பி RAM மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் இதில் அடங்கும். ஆனால் 128ஜிபி ஸ்டோரேஜ் வரை விருத்தி படுத்திக் கொள்ளலாம்.

×Close
×Close