ஜியோபோனை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஜியோபோன் டெலிவரி செய்து முடிக்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ட்விட்டரில் வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது, ஜியோ இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜியோபோனின் முன்பதிவு தொடங்கியது. செம்படம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஜியோபோன் டெலிவரி செய்யப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெலிவரி செய்யப்படுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால், செம்டெம்பர் 24-ம் தேதி முதல் ஜியோபோனின் டெலிவரி தொடங்கியது. அதன்படி, நகர்புறங்களில் டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னதாக கிராமபுப்புற பகுதிகளில் இருந்து டெலிவரியை தொடங்கியது ஜியோ நிறுவனம். 15 நாட்களில் ஜியோபோன் டெலிவரி செய்யப்படுவது நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு (செப்டெம்பர் 19) முன்னதாக, முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஜியோபோன் டெலிவரி செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
1800 890 8900 என்ற எண்ணை தொடர்பு கொண்டும், மை ஜியோ ஆப் பயன்படுத்தியும் ஜியோபோன் டெலிவரி குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். தற்போதைய நிலையில், ஜியோபோனுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஜியோபோன் வாங்க விரும்பும் நபர்கள் தங்களது விருப்பத்தினை, ஜியோ நிறுவனத்தின் இணையதளம், மை ஜியோ ஆப் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோபோன் சிறம்பம்சத்தை பொறுத்தவரை, 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஃபீச்சர்போனாகும். அதோடு, வாஸ்ட் அஸிஸ்டன்ட், 2.4 QVGA டிஸ்ப்ளே, சிங்கிள் சிம் பொறுத்தும் வசதி கொண்டது. இதில் ஜியோ சிம் மட்டுமே பொருத்தி பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மைக்ரோ எஸ்.டி கார்டு, எஃப்.எம் ரேடியோ, டார்ச் லைட், 2 எம்.பி கேமரா, 0.3 முன்பக்க கேமரா, 512 எம்.பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகும். 2000mAh பேட்டரி திறனை கொண்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.