ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய ஜியோபோன் முன்பதிவு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, சுமார் 10-லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்துள்ளதாக ஜியோ தெரிவித்தது. முதற்கட்ட முன்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது ஜியோபோன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஜியோபோன் வாங்க நினைப்பவர்கள் தங்களது விருப்பத்தினை பதிவு செய்து கொள்ளும் வைகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக முன்பதிவு செய்யும் வகையில், இணையதளத்தில் இருந்த பகுதியானது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த முன்பதிவு தொடங்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றி இந்தியா... 10 லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்துள்ளனர்” என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.
விருப்பம்
Jio.com. என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்றதும், “ரிஜிஸடர் நவ்” என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், அந்த பக்கத்தில் இருக்கும் விண்ணப்பத்தை, பூர்ச்த்தி செய்து க்ளிக் செய்யவும். தொடர்ந்து உங்களது விருப்பம் பதிவு செய்யப்பட்டு, அற்கான எஸ்.எம்.எஸ் மற்றும் ஈமெயில் உங்களுக்கு வந்து சேரும். இதன்மூலம், ஜியோபோன் குறித்த தகவல்களை ஜியோ நிறுவனம் உங்களுக்கு அனுப்பும்.
முன்பதிவு ஸ்டேட்டஸ்
முன்பதிவு ஏற்கெனவே செய்திருக்கும் நபர்கள் தங்களது ஸ்டேடஸ் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் அதற்கு பிரத்யேக நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள் ‘18008908900’ என்ற எண் மூலமாக தங்களது ஜியோபோனின் நிலை என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதேபோல, ஜியோ ஆப் மூலமாகவும், இதனை மேற்கொள்ள இயலும்.
ஜியோ ஆப்ஸ்
4ஜி வோல்ட்இ வசதிகொண்ட இந்த ஜியோபோன், ஃபீச்சர்போன் வகையில் அதிக சிறம்பம்சங்களை கொண்டதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், போனில் ஏற்கெனவே ஜியோ ஆப்ஸ் நிறுவப்பட்டு தான் இந்த ஜியோபோன் வெளிவருகிறது. ஜியோ சிம் மட்டுமே பொருத்தும் வகையில் இந்த தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற நிறுவனத்தின் சிம்-களை இதில் உபயோகிக்க முடியாது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வாய்ஸ் கமென்ட்க்கு, பதில் அளிக்கும் வகையில் இந்த ஜியோபோன் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், பாதுகாப்பு தொகையாக முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது திரும்ப பெறக்கூடியது என்றும், 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த தொகை திருப்பக் கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவின் போது முதற்கட்டமாக ரூ.500 செலுத்த வேண்டும், பின்னர் ஜியோபோன் பெற்றுக்கொள்ளும்போது மீதமுள்ள தொகையான ரூ.1000 செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
ப்ளான்ஸ்
ரூ.153 என்ற விலையில் மாதாந்திர ப்ளான் அறிமும் செய்யப்பட்டது. அந்த ப்ளான்டி தினமும் 500 எம்.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படும். இதேபோன்று வாராந்திர ப்ளான் மற்றும் இரண்டு நாட்களுக்கான ப்ளான் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். ரூ.54-க்கு வாராந்தி ப்ளானும், ரூ. 24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ப்ளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.