ஜியோபோன் முன்பதிவு… தீபாவளி முடிந்ததும் விரைவில் தொடங்கும் என தகவல்

ஜியோபோன் முன்பதிவு அடுத்தக்கட்டமாக தீபாவளி முடிந்ததும் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளன

Reliance Jio, JioPhone, Reliance, Diwali,

ஜியோபோனுக்கான அடுத்த முன்பதிவானது தீபாவளி முடிந்ததும் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்களை ஜியோ பக்கம் ஈர்க்கும் முயற்சியில் களம் இறங்கியது. இதற்காக 4ஜி வசதியிடன் கூடிய ஃபீச்சர்போன் இலவசம் என அறிவித்தார் முகேஷ் அம்பானி. ஜியோபோன் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டதனால், ஜியோபோனுக்கான எதிர்பார்ப்பு மக்ளிடையே அதிகரித்திருந்தது. எனினும், பாதுகாப்பு தொகையாக ரூ.1500 முதலில் செலுத்த வேண்டும் என்றும் 3 வருடங்களில் அந்த தொகை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஜியோபோனுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், மூன்று நாட்களில் சுமார் 60 லட்சம் ஜியோபோன்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, முதற்கட்ட முன்பதிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதிக முன்பதிவு செய்யப்பட்டதனால், ஜியோபோன்கள் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக முன்னதாகவே ஜியோபோன் டெரிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் டெலிவரி தொடங்கிறது. குறிப்பிடும்படியாக ஜியோபோன் கிராமப்புறங்களில் இருந்து படிப்படியாக டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஜியோபோனுக்கான அடுத்தக்கட்ட முன்பதிவு விரைவில் தீபாவளி முடிந்ததும் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் ஜியோபோன் முன்பதிவு தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜியோபோன் இலவசமா? ரூ.4,500-க்கு ரீசார்ஜ் செய்திருந்தால் தான், ரூ.1,500 ரிட்டர்ன்… ஜியோவின்விதிமுறைகள்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jiophone pre booking to resume post diwali

Next Story
வோடபோன் அதிரடி ஆஃபர்… ரூ.399-ல் 90 ஜி.பி 4ஜி டேட்டா… சாபாஷ் சரியான போட்டி!vodafoneVodafone,Airtel, Relaince Jio, 90GB 4G data, Rs.399, unlimited voice calls,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com