ரிலையன்ஸ் ஜியோ: ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

ஜியோபோன் வாங்க ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது மூன்று வருடங்களில் திரும்ப கொடுக்கப்படும்

ஜியோபோன், Reliance Jio, JioPhone, Smartphones,

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாக அறிவித்த 4ஜி பீச்சர்போன் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5:30 மணிக்கு அந்நிறுவனத்தில் இணையதளத்திலும, ஸ்டோர்களிலும் தொடங்குகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.500 முன்பதிவுக்கு செலுத்த வேண்டும், பின்னர் செம்படம் மாத தொடக்கத்தில் ஜியோபோன் வாங்கும்போது மீதமுள்ள ரூ.1000 செலுத்த வேண்டும்.

முகேஷ் அம்பானியின் இந்த கனவு திட்டத்தில், முதற்கட்டமாக முதல் ஆண்டில் மட்டும் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோபோன் விற்பனை செய்ய ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபீச்சர்போனில் 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட சிறம்பம்பம்சம் கொண்ட வகையில் இந்த ஜியோபோன் விற்பனைக்கு வரவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இலவசமான போன் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு, முன்பதிவுக்கு எராளமானோர் போட்டியிடுவர் என்பது தெரிகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த போனை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, முன்பதிவு தொடங்கும், அந்த சமயத்திலேயே ஜியோபோனை முன்பதிவு செய்தால் மட்டுமே அதனை விரைவில் பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோபோன் முற்றிலும் இலவசம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், பாதுபாப்பு தொகையாக முதலில் ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது திரும்ப பெறக்கூடியது என்றும், 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த தொகை திருப்பக் கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபீச்சர்போன் என்றபோதிலும், வீடியோ கால்ஸ், வெப் ப்ரவுசிங் என்ற பல்வேறு சிறம்பம்சங்கள் உள்ளதால், ஜியோபோனுக்கு அதிக டிமான்ட் இருக்கும்.

ரூ.153 என்ற விலையில் மாதாந்திர ப்ளான் அறிமும் செய்யப்பட்டது. அந்த ப்ளான்டி தினமும் 500 எம்.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்ஸ், 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படும். இதேபோன்று வாராந்திர ப்ளான் மற்றும் இரண்டு நாட்களுக்கான ப்ளான் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். ரூ.54-க்கு வாராந்தி ப்ளானும், ரூ. 24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ப்ளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

ஜியோபோன் சிறம்பம்சங்கள்

  • 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
  • டார்ச் லைட், ஜியோ ஆப்ஸ், ஆல்ஃபாமெட்ரிக் கீபேட்
  • 24 பிராந்திய மொழிகள் சப்போர்ட் செய்யக்கூடியது.
  • வாய்ஸ் கமென்ட்ஸ்க்கு பதில் அளிக்கக்கூடியது.

ஜியோபோன் குறித்த மற்ற செய்திகள்…

Web Title: Reliance jiophone pre bookings start today here is why this feature phone is a threat to smartphones

Next Story
ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்… “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்!sharp
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com