ஜியோஃபோன் ஃப்ரி தான்... ஆனால், அதற்கான செலவு என்ன?

ரூ.153 என்ற விலை அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு மாற்று சலுகைகளும் இருகின்றன. அதன்படி ரூ.24 மற்றும் ரூ.54 என்ற ரீசார்ச்சில் இதனை பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4 ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போனை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அந்த ஜியோஃபோன் குறித்த பல்வேறு கேள்விகள் எழுத்திருக்கும் அல்லவா? 4ஜி வோல்ட்இ சிறம்பம்சங்களை கொண்டிக்கும் இந்த ஜியோஃபோன், பயனுள்ளதாக இருக்குமா? ஃபோன் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஃபோனின் விலை எவ்வளவு இருக்கும்? இப்படி பல்வேறு குழப்பான கேள்விகள் எழுந்திருக்கும். அது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

ஜியோவின், 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்ஃபோனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்திருக்கிறார். இந்த ஜியோஃபோனாது முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ரூ.1500 பாதுகாப்புத் தொகை செலுத்த வேண்டும். இந்த தொகை 3 ஆண்டுகளில் திருப்பி கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், நீங்கள் பயன்படுத்திய ஜியோஃபோனையும் திரும்ப செலுத்த வேண்டும்.

எனவே, ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டும் என்பதால், ஜியோஃபோனின் விலை ரூ.1500 என்றே எடுத்துக் கொள்ளலாம். இந்த ஜியோஃபோனில் வாய்ஸ் கால்ஸ் மற்றும் டேட்டா கால்ஸ் ஆகியவை இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மற்ற ப்ளான்களை போல அதிக கட்டணம் செலுத்த தேவையில்லை. ரூ.153 என்ற குறைந்தபட்ச ரீசார்ச் செய்தால், ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கும். அதில், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை (FUP 500 எம்.பி or 0.5 ஜி.பி நாள்தோறும் ) பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரூ.153 என்ற விலை அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு மாற்று சலுகைகளும் இருகின்றன. அதன்படி ரூ.24 மற்றும் ரூ.54 என்ற ரீசார்ச்சில் இதனை பெற முடியும். ரூ.24-க்கு ரீசார்ச் செய்யும்போது இரண்டு நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். இதேபோல, ரூ.54-க்கு ரீசார்ச் செய்யும்போது ஒருவார கால வேலிடிட்டியை பெற முடியும். இந்த ரீசார்ச்சின் மூலமாக வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் கால்ஸ்+டேட்டாவை பெற முடியும்.

ஒருவேளை, ரூ.153 என்ற ப்ளானை ஆண்டு முழுவதும் பயன்படுத்தினால், அதற்கு ரூ.1836 செலவாகும். அதன்படி, பாதுகாப்பு தொகையாக செலுத்தும் ரூ.1500 மற்றும் ஆண்டு செலவீனம் ரூ.1836 ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது, முதல் ஆண்டுக்கு ஜியோஃபோனின் செலவீனம் ரூ.3336 ஆகும்.

ஆனாலும், பாதுகாப்புத் தொகை ரூ.1500 என்பது திருப்பிப் பெற்றுக் கொள்ளக் கூடியது என்பது கவனிக்கத்தக்கது. இதனை மூன்று வருடங்களுக்கு பின்னர் பெற்றுக் கொள்ள முடியும்.பயன்படுத்திய ஜியோஃபோனை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படி கொடுக்கவில்லை என்றாலும், இந்த ஜியோஃபோனின் விலை ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே ஆகும்.

ஜியோஃபோனுக்கான முன்பதிவானது வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது. செம்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. முன்னதாக இது தொடர்பாக முகேஷ் அம்பானி கூறும்போது, ஒவ்வொரு வாரத்திற்கும் 50 லட்சம் ஜியோஃபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், அன்லிமிடெட் கால்+டேட்டா ஆகிவற்றுடன் குறைந்த விலையில் ஜியோஃபோன் வருகிறது என்றால் மக்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? எனவே, ஆரம்பத்தில், ஜியோ சிம்-க்கு இருந்த டிமாண்டை போல இந்த ஜியோஃபோனுக்கும் டிமாண்ட் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

×Close
×Close