scorecardresearch

ஜியோவின் காதலர் தினப் பரிசு: இலவச டேட்டா, விமான டிக்கெட் சலுகை மற்றும் பல!

Reliance Jio’s new Valentine’s Day offer: ரிலையன்ஸ் ஜியோ காதலர் தினச் சலுகையாக கூடுதல் மொபைல் டேட்டா, விமான டிக்கெட்டுகளில் சலுகை உள்பட பல ஆஃபர்களை வழங்கியுள்ளது.

Reliance Jio
Reliance Jio

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரிசார்ஜ் சலுகைகள் வழங்கி வருகின்றன. அந்தவகையில்
ரிலையன்ஸ் ஜியோவும் சலுகைகளை அறிவித்துள்ளது. இலவச டேட்டா, விமான டிக்கெட் சலுகை மற்றும் உணவு ஆர்டர்களில் ரூ.150 ஆஃபர் என பல சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜியோ காதலர் தின ஆஃபர்

காதலர் தின சிறப்பாக 4 ஆஃபர் வழங்கப்படுகிறது. கூடுதல் 12ஜிபி 4ஜி இலவச டேட்டா, ரூ.4,500 அல்லது அதற்கு மேற்பட்ட விமான முன்பதிவுக்கு ரூ. 750 தள்ளுபடி, ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் மற்றும் ப்ரீ பர்கர் கடைகளில் ரூ.799 ஆர்டருக்கு செய்தால் ரூ.150 தள்ளுபடி, மெக்டொனால்ட்டில் ரூ.105 தள்ளுபடி எனப் பல ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.

12ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவை ரிடீம் செய்ய, பயனர்கள் MyJio ஆப் சென்று ‘வவுச்சர்’டேப் சென்று பெற வேண்டும். இந்த கூடுதல் டேட்டாவை உங்கள் தற்போதை ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தலாம்.

விமானக் கட்டண முன்பதிவில் ரூ.750 தள்ளுபடி பெற விரும்பினால், MyJio ஆப் சென்று ‘Coupons and Winnings’ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூப்பன் கோடு விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். Ixigo ஆப் மூலம் அதை பெற்றுக் கொள்ளலாம். ஃபெர்ன்ஸ் மற்றும் பெட்டல்களுக்கான ரூ.150 தள்ளுபடியையும் ‘Coupons and Winnings’ பக்கத்தில் பெறலாம்.

மெக்டொனால்டின் சலுகையைப் பொறுத்தவரை, பயனர்கள் ரூ. 200 அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்தால், ரூ.105 மதிப்புள்ள McAloo Tikki or a Chicken Kebab burger இலவசமாகப் பெறலாம். இதற்கும் MyJio ஆப் சென்று கூப்பன் பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ காதலர் தினச் சலுகை ரூ.249, ரூ.899 மற்றும் ரூ.2999 திட்டங்களுக்கு பொருந்தும். பிப்ரவரி 10 அல்லது அதற்குப் பிறகு ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த பலன்களைப் பெற தகுதி பெறுவார்கள், கூப்பன்கள் ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்திற்குள் MyJio ஆப் அக்கவுண்ட்டில் credit ஆகிவிடும். 30 நாட்கள் ஆஃபரைப் பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Reliance jios new valentines day offer check compatible plans benefits how to claim

Best of Express