இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ளது. குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சி மற்றும் மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டும் அணிவகுப்பு நிகழ்ச்சி கர்தவ்யா பாதையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் தொடங்கி உள்ளது. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 26 அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் ஜனவரி 28,29 படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்கும் புக்கிங் செய்யப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் பிரத்யேக இணையதளத்தை அறிவித்துள்ளது.
எப்படி டிக்கெட் புக் செய்வது?
ஜனவரி 2 முதல் ஜனவரி 11, 2025 வரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
1. www.aamantran.mod.gov.in என்ற மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லவும்.
2. குடியரசு தின அணிவகுப்பு அல்லது படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி என்ற எந்த விழாவிற்கு
டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று செலக்ட் செய்யவும்.
3. உங்கள் அடையாள ஐ.டி மற்றும் மொபைல் எண் குறிப்பிடவும்.
4. அதன் பின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ரூ.20 மற்றும் ரூ.100 என ஒரு நபருக்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு செல்லும் போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.