scorecardresearch

ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு மாத கட்டணம்.. அடுத்த திட்டத்தை களமிறக்கும் எலான் மஸ்க்!

Twitter Blue Tick verification: பயனர்களின் அதிகாரப்பூர்வ கணக்கை உறுதிப்படுத்தும் ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு மாத கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு மாத கட்டணம்.. அடுத்த திட்டத்தை களமிறக்கும் எலான் மஸ்க்!

பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்த கட்டமாக, தற்போது ‘ப்ளூ டிக்’ வசதிக்கு மாத கட்டணமாக 9.99 டாலர் இந்திய மதிப்பில் ரூ. 1647.17 வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர், உலக முழுவதும் பயன்படுத்தும் பிரபல சமூகவலைதளமாகும். பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சமூகத்தின் மீதான கருத்துகள், தங்களது சொந்த கருத்துகள் என பலவற்றை அதில் பதிவிட்டு வருகின்றனர். தலைவர்கள், பிரபலங்கள் தங்களை பற்றின தகவல்களை ட்விட்டரில் அதிகம் பகிர்கின்றனர். இதனால் ட்விட்டர் எப்போதும் பரபரப்பான தளமாகவே உள்ளது. இந்தநிலையில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் ஒப்பந்தத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) இறுதி செய்து வாங்கினார்.

உரிமையாளரான முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்திய வம்வாளியைச் சேர்ந்த சி.இ.ஓ பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். இது உலக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில், தற்போது ப்ளூ டிக் வசதிக்கு மாத கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ட்விட்டரின் பயனர் சரிபார்ப்பு செயல்முறைகளும் (whole verification process) முழுமையாக மாற்றியமைக்கப்பட உள்ளது என மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு ஏற்கனவே பணம் வசூலிக்கப்பட்டாலும் தற்போது அதிகரித்து வசூலிக்கப்பட உள்ளது. ட்விட்டர் ப்ளூ டிக் வசதி பெரும்பாலும் தலைவர்கள், பிரபலங்கள் போன்றோருக்கு அதிகாரப்பூர்வ கணக்கு என அடையாளம் காண வழங்கப்படும் ஒரு வசதியாகும்.

இந்த வசதி ஆண்டு ஜூன் மாதம் ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்தா செலுத்தும் வசதியாகும். இது சில ப்ரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. அதன்படி ட்வீட்களை எடிட் செய்து செய்து கொள்ளலாம். சாதாரணமாக ட்விட்டரில் ட்விட் எடிட் ஆப்ஷன் இல்லை. ஆனால் இந்த வசதி அனைவருக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் ரூ. 1647.17 மஸ்க் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Revamping verification to moderation council elon musks big plans for twitter so far