சாம்சங் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாகும். ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது டி.வி, வாஷிங் மெஷின் எனப் பல தொழில்நுட்ப சாதனங்களையும் தயாரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஆப்பிள் பொருட்களுக்கு நிகராக வழங்கி வருகிறது. இவ்வாறு இருந்தாலும், பட்ஜெட் விலை பயனாளர்களை கவர அட்டகாசமான ஸ்மார்ட்போனை நேற்று (புதன்கிழமை) இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்சி F04 (Samsung Galaxy F04) என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்சி F04 போன் ரூ.7499 என்ற அடிப்படை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மீடியா டெக் பி35 பிராசஸர் மற்றும் 6.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே ஆகியவை இந்த போனின் சிறப்பம்சமாகும். டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல் resolution கொண்டது. MediaTek P35 சிப் PowerVR GE8320 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது. சார்ஜிங் வேகத்தை பற்றி சாம்சங் குறிப்பிடவில்லை.
சாம்சங் கேலக்சி F04 போன் டூயல் கேமரா வசதி கொண்டது. 12MP பிரதான கேமரா மற்றும் 2MP கேமரா அமைப்பு கொண்டது. செல்ஃபி கேமரா முன்பக்க கேமரா 5MP வாட்டர் டிராப் நாட்ச் அம்சம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் வெரியன்ட் ( variant) மட்டுமே
Samsung Galaxy F04 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. ரூ.7,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேம் பிளஸ் மூலம் 8ஜிபி வரை expand செய்து கொள்ள முடியும். Jade Purple மற்றும் Opal Green நிறத்தில் போன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த போன் ஜனவரி 12-ம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Android 12 OS மூலம் போன் இயக்கப்படுகிறது. இருப்பினும் சாம்சங் “2 முறை ஓஎஸ் மேம்படுத்தல்” பயன்படுத்தி ஆண்ட்ராய்டு 14 வரை அப்கிரேடு (புதுப்பித்து) கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/