சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்… இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க விருப்பம்!

இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சாம்சங் கேலக்ஸி நோட் 8 (Galaxy Note 8) ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம்

By: Updated: September 11, 2017, 02:19:05 PM

சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சாம்சங் கேலக்ஸி நோட் 8 (Galaxy Note 8) ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 1.5 லட்சம் பேர் அமேசான் வணிகதளத்தின் மூலம் விரும்பம் தெரிவித்துள்ளனராம். மேலும், சாம்சங் இணையதளத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனமானது சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேநாளில் தான் ஆப்பிள் நிறுவனமானது, ஆப்பிள் 8 ஸ்மார்ட்போனை கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு அதிக மதிப்பு இருப்பதால் சாம்சங், அதேநாளில் அறிமுகம் செய்யவுள்ளது.

ல்லியில் செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சி சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான அழைப்புகளை சாம்சங் நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மதிப்பு ரூ.65,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung galaxy note 8 pre registrations hit over 2 5 lakh in india report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X