சாம்சங் நிறுவனமானது தனது அடுத்த ஸ்மார்ட் போனான சாம்சங் கேலக்ஸி நோட் 8-ன் டீசரை வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட்-8 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் தற்போது இந்த டீசரை வெளியிட்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் வெளியிட இருக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனானது அந்நிறுவனத்தின் விலைமதிப்பான போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் -8 அறிமுகம் செய்யப்படவுள்ளது.
#DoWhatYouCant என்ற ஹேஸ்டேக் மூலம் சாம்சங் இந்த டீசரை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில், எதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஹேஸ்டேக்கை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை.
ஆனால், இந்த டீசரை பார்க்கும் போது, அதில் அந்த ஸ்மார்ட்போனில் எழுதும் வகையில் உள்ள எஸ்-பென் இருப்பதை காண முடிகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 குறித்து பல்வேறு விதமான உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளிவருகின்றன. அந்த தகவல்களின்படி பார்க்கும்போது, கேலக்ஸி நோட் 8 , 6.3 இன்ச் டிஸ்ப்ளே சிறப்பம்சத்துடன் வர இருக்கிறதாம். அமெரிக்காவில் வெளியிடப்படுவதில் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர் கொண்டிருக்கும் என்றும், மற்ற சர்வதேச அளவில் வெளியிடப்படுவதில் எக்சினோஸ் 8895 ப்ராசஸரை இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 கொண்டிருக்குமாம். ஆனாலும், அந்த இரண்டு வகைகளிலும், 6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும், சாம்சங் நோட் 8-ல் 3300mAH திறன்கொண்ட பேட்டரி மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோட் 8-ஆனது சாம்சங்கின் டுயல் கேமரா(12MP + 8MP) சிறப்பம்சம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் செம்டம்பர் மாதத்தில் சர்வதேச சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவில் இந்த மாதத்திலயே விற்பனைக்கு வரலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.