சாம்சங் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். ஆப்பிள் போன்களுக்கு இணையான ஸ்மார்ட்போன்கள் தயாரித்து வருகின்றன. பட்ஜெட் விலை போன்கள் முதல் விலையுயர்ந்த போன்கள் வரை தயாரித்து வருகின்றன. இந்நிலையில் சாம்சங், கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.
பிப்ரவரி 1- ம் தேதி கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் போன் வெளியிடப்படும் என்று சாம்சங் கொலம்பியா இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக 2 வகையான போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இரண்டும் ட்ரிபிள் கேமரா போன்கள் ஆகும். 4 நிறத்தில் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, காட்டன் ஃப்ளவர், மிஸ்டி லிலாக், பொட்டானிக் கிரீன் மற்றும் பாண்டம் பிளாக் ஆகிய நிறங்களில் உள்ளன.
200MP கேமரா?
கேலக்ஸி எஸ் 23 மற்றும் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ( Galaxy S23 Ultra) போன்கள் வெளியிடப்படுகிறது. Galaxy S23 Ultra ஆனது 12MP அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ சென்சார்கள் கொண்டிருக்கும். 200MP கேமரா பேக் உடன் வரும் என்று கூறப்படுகிறது.
ரூ. 7000 மட்டுமே.. அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சாம்சங்.. பொங்கலுக்கு மெகா பரிசு!
மேலும், கேலக்ஸி எஸ் 23 போன் கார்னர்களில் வட்ட வடிவிலான தோற்றமும் அதேசமயம் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா பாக்ஸ் போன்ற தோற்றமும் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சீரிஸ் போன்கள் அனைத்தும் ஒரே மாதிரியான ஸ்கிரின் சைஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா 6.8 இன்ச் ஸ்கிரின் சைஸ் கொண்டிருக்கும். கேலக்ஸி எஸ் 23 மற்றும் கேலக்ஸி எஸ் 23 பிளஸ் முறையே 6.6 இன்ச் மற்றும் 6.1 இன்ச் ஸ்கிரின் சைஸ் கொண்டிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/