சாம்சங் கேலக்ஸின் எஸ்9 டீசர் வெளியீடு! 

மொபைல் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சாம்சங் கேலக்ஸின் எஸ்9 டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்9 ஸ்மார்ஃபோன் குறித்து, அவ்வப்போது சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு தேதி  நெருங்கி வருகிறது.

இந்த தருணத்தில், அந்நிறுவனம், கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ஃபோனின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் அசத்தலான வடிவத்தில், வெளியாக இருக்கும் கேலக்ஸி எஸ்9 ஃபோன் குறித்த பல தகவல்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் சிறந்த கேமரா வசதி, 3D தொழில் நுட்ப எமோஜிகள், ஸ்லோ-மோ போன்ற  பலவகையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  கேலக்ஸி எஸ்9 சீரியஸில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை அந்நிறுவனம் 3 டீசர்களாக பிரித்து வெளியிட்டுள்ளது.

முதல் டீசரில் வேகத்தை சுட்டிக் காட்டி, புதிய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்க வாய்ப்புள்ளது போல் கூறுகிறது.    முந்தைய ஸ்மார்ட்போனினை விட புதிய எஸ்9 அதிவேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டீசரில் லோ-லைட் கேமரா அதாவது, குறைந்த வெளிசத்தில், நம்பமுடியாத அளவிற்கு தெளிவான ஃபோட்டோக்களை எடுக்கலாம் என்று கூறியுள்ளது. மூன்றாவது டீசரின் படி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருக்கும்.  நிறைவுறும் போது 3D எமோஜி வந்து செல்வது. பார்ப்பவர்களை அதிகளவில் ஈர்த்தது இந்த டீசர் தான்.

இப்படி, அடுக்கடுக்காக, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கும்  சாம்சங் கேலக்ஸின் எஸ்9  ஸ்மார்ஃபோனின் முழு விபரம்   பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தெரியவரும் என்று டீசரின் முடிவில் கூறப்பட்டுள்ள செய்தி.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close